எம்.பி-க்களின்(MP) ஊதியமும், சலுகைகளும்! வீட்டு வாடகைக்காக மட்டும் மாதம் ரூ.2 லட்சம்! அது மட்டுமா…!

0
35
What are the salaries, perks and allowances of Indian President, PM and MPs? | File Image

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) 293 எம்.பி-க்கள், எதிர்க்கட்சிகளின் இண்டி (INDIA) கூட்டணியின் 232 எம்.பி-க்கள் மற்றும் பிற கட்சிகள், சுயேச்சை எம்.பி-க்களால் 18வது மக்களவை அலங்கரிக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 105-ன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு(MP) அளிக்கப்படும் ஊதியமும், சலுகைகளும் என்னனென்ன என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.

மாதச் சம்பளமாக எம்.பி-க்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. பணவீக்க விகிதம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றுடன் இவர்களின் ஊதியத்தைச் சீரமைக்கும் நோக்கத்துடன் 2018-ல் இந்த ஊதிய உயர்வு கொண்டுவரப்பட்டது.

தொகுதி செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.70,000 வழங்கப்படுகிறது. இது, அவர்களின் அலுவலகங்களைப் பராமரித்தல், தொகுதிகளுக்குள் பயணம் மேற்கொள்வதற்காக அளிக்கப்படுகிறது.

அலுவலக செலவுகளுக்காக மாதந்தோறும் மாதந்தோறும் ரூ.60,000 வழங்கப்படுகிறது. இது, அலுவலக ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்டவை இதில் அடங்கும். நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் கூட்டத் தொடர்களின்போது, தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்காகத் தினசரி ரூ.2,000 வழங்கப்படுகிறது.

Also Read : தேர்தல் தோல்வி எதிரொலி! ரங்கசாமி மீது பாயும் பாஜக! அமைச்சரவையில் இருந்து வெளியேற முடிவு? டெல்லியில் ரகசியக் கூட்டம்!

எம்.பி-க்கள் தங்கள் குடும்பத்தோடு, ஆண்டுக்கு 34 முறை இலவசமாக உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொள்ளலாம். தங்களின் பணி மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக இலவச முதல் வகுப்பு ரயில் பயணமும் மேற்கொள்ளலாம். மேலும், தொகுதிக்குள் சாலை வழியாகப் பயணிக்கும்போது அதற்கான செலவுகளையும் எம்.பி-க்கள் கோரலாம்.

எம்.பி-க்களுக்கு அவர்களின் 5 ஆண்டுகால பதவிக் காலத்தில், பிரதான பகுதிகளில் வாடகையில்லா தங்குமிடங்கள் வழங்கப்படுகின்றன. இது, அவர்களின் சீனியாரிட்டி பொறுத்து பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது விடுதி அறை என இருக்கும். ஒருவேளை, இவை வேண்டாமென்றால் மாதம் ரூ.2,00,000 வீட்டுக் கொடுப்பனவைப் பெறலாம்.

எம்.பி-க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் இலவச மருத்துவ சேவையைப் பெறலாம். அரசு மருத்துவமனைகள் மற்றும் CGHS திட்டத்தின் கீழ் வரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

ஒரு முறை எம்.பி பதவி வகித்தாலும், பதவிக் காலத்துக்குப் பிறகு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படுகிறது. இது, அவர்களது பதவிக் காலத்தைப் பொறுத்து, மாதம் ரூ.2,000 வீதம் ஓய்வூதியம் அதிகமாக வழங்கப்படுகிறது.

எம்.பி-க்களுக்கு ஆண்டுதோறும் 1,50,000 இலவச தொலைபேசி அழைப்புகள் ஒதுக்கப்படுகின்றன. மேலும், அவர்களின் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இலவச அதிவேக இணைய சேவையும் அளிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் 50,000 யூனிட் வரை இலவச மின்சாரமும், 4,000 லிட்டர் வரை இலவச தண்ணீரும் வழங்கப்படுகிறது. இவை தவிர தொகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒவ்வொரு எம்.பி-க்கும் தொகுதி வளர்ச்சி நிதி என்ற பெயரில் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : இதுவரை வெளிவராத ரகசியங்கள்! பிரபாகரனுக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் போட்டுவிட்ட ராஜீவ்காந்தி! புலிகள் இயக்கத்துக்கு கொடுக்கப்பட்ட ரூ.5 கோடி நிதி! ‘The Rajiv I Knew’!

பிரதமருக்கு மாதம் ரூ.1.66 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர, பிரதமருக்கு செலவுக் கொடுப்பனவாக ரூ.3,000 மற்றும் நாடாளுமன்ற கொடுப்பனவாக ரூ.45,000 பெறுகிறார். இதனுடன், ஒரு நாளைக்கு ரூ.2,000 தினசரி கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. மாதாந்திர கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, இந்தியப் பிரதமர் பலவிதமான கூடுதல் நன்மைகள் மற்றும் சலுகைகளை அனுபவிக்கிறார். பிரதமருக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தின் வாடகை மற்றும் பிற வீட்டுச் செலவுகள் வழங்கப்படும். பிரதமரின் பாதுகாப்புக்கு சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி) பொறுப்பாகும். பிரதமரின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்க வாகனங்கள் மற்றும் விமானங்களின் கடற்படையை அணுக முடியும். பிரதமர் வெளிநாடு செல்லும்போது தங்குமிடம், உணவு மற்றும் பயணச் செலவுகளை அரசாங்கம் ஏற்கிறது. பிரதமர் பணிக்காலத்துக்குப் பிறகு இலவச தங்குமிடம், மின்சாரம், வாழ்நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் எஸ்பிஜி பாதுகாப்பு ஆகியவற்றைப் பெறுவார்கள்.

நாட்டின் குடியரசுத் தலைவருக்கு மாத ஊதியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. உலகில் எங்கு வேண்டுமானாலும் ரயில், விமானம் மூலம் இலவசமாக பயணம் செய்யலாம். இலவச வீடு, மருத்துவ வசதி, அலுவலக செலவுக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகளில். வாடகை இல்லாத பங்களா, இரண்டு இலவச லேண்ட்லைன்கள் மற்றும் மொபைல் போன் ஆகியவை அடங்கும். குடியரசு முன்னாள் தலைவருக்கு ஐந்து தனிப்பட்ட ஊழியர்களும் உள்ளனர், அவர்களின் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ .60,000 வரை தரப்படும். கூடுதலாக, குடியரசு முன்னாள் தலைவர் மற்றும் ஒரு துணைக்கு ரயில் அல்லது விமானத்தில் இலவச பயணம் வழங்கப்படுகிறது.

Also Read : சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? இதோ உங்களுக்கான பதில்! Vels Exclusive

குடியரசு துணைத் தலைவருக்கு (மாநிலங்களவைத் தலைவர்)மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. கூடுதலாக, அனைத்து வகையான தினசரி கொடுப்பனவுகளையும் பெறுகிறார். தங்குமிடம், இலவச மருத்துவ வசதி, இலவச ரயில் மற்றும் விமான பயணம், லேண்ட்லைன் இணைப்பு மற்றும் மொபைல் போன் சேவை ஆகியவை கிடைக்கும். தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஊழியர்களும் உள்ளனர். ஓய்வு பெற்ற பிறகு மாதம் 1.5 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். குடியரசுத் தலைவர் இல்லாத நேரத்தில் அவரது பணிகளை குடியரசு துணைத்தலைவர் செய்தால், துணைத் தலைவர், குடியரசுத் தலைவரின் ஊதியம் மற்றும் பிற சலுகைகளையும் பெறுவார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry