எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க ஓபிஎஸ் மறுப்பு! பொதுக்குழு வழக்கில் இருந்து விலகினார் நீதிபதி!

0
165

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை, வேறு நீதிபதிக்கு மாற்றும்படி, தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பிய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று கண்டனம் தெரிவித்தார்.

பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை, நீதித்துறையை களங்கப்படுத்துவதாகவும், தரக் குறைவாக இருப்பதாகவும் நீதிபதி அதிருப்தி வெளியிட்டார். மேலும், இந்த வழக்கை இன்று விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.

Also Read : உங்கள் செயல் கீழ்த்தரமாக உள்ளது! ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த ஐகோர்ட்!

இன்றைய விசாரணையின் போது, நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் நீதிபதி மீது எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை எனவும், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக தங்கள் முன் வாதிட விரும்புவதாகவும் கூறி, ஓ.பி.எஸ் தரப்பு மன்னிப்பு கோரியது. இதனையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‛தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்ப பெறுங்கள். மன்னிப்புக் கோரியது உட்பட தன்னிடம் கூறிய அனைத்தையும் மனுவாக தாக்க செய்யுங்கள்’ என உத்தரவிட்டார்.

அதற்கு ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், ‛தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்ப பெறுவது குறித்து ஓபிஎஸ் தரப்பில் கேட்டு சொல்வதாகக் கூறினார். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை நீதிபதி சற்று நேரத்திற்கு ஒத்திவைத்தார்.

FILE IMAGE

சிறிது நேரத்திற்கு பிறகு துவங்கிய விசாரணையின்போது, ‛மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ய முடியாது’ என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி கூறும்போது, ‛2 நாட்களுக்கு முன் என்னிடம் முறையிட்டிருந்தால், நானே விலகியிருப்பேன். அதை விடுத்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளீர்கள்’ எனக்கூறி வழக்கை மாலை 4:30க்கு ஒத்திவைத்தார்.

மாலை 4: 30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொதுக்குழு வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பார் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனக்கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry