டான்ஜெட்கோவுக்கு ரூ.1,000 கோடி கூடுதல் வட்டிச்சுமை! தமிழக அரசும் காரணம் என்கிறது சிஏஜி!

0
230

உதய் மின் திட்ட விவகாரத்தில், டான்ஜெட்கோவின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காததால், டான்ஜெட்கோவுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வட்டிச்சுமை ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட விலையான ஒரு யூனிட்க்கு 3 ரூபாய் 50 காசுகள் என்ற விலையில் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை புதுப்பிகத் தவறியதால் டான்ஜெட்கோவுக்கு 149 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்பட்டுவிட்டதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி அக்கவுன்டன்ட் ஜெனரல் விஸ்வநாத் சிங் ஜோடான், முதன்மை அக்கவுன்டன்ட் ஜெனரல் அம்பலவாணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அம்பலவாணன், “டான்ஜெட்கோவின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காத காரணத்தால் 1003 கோடி ரூபாய் கூடுதல் வட்டி சுமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பகுதி அளவு மட்டுமே கடனை ஏற்றதால் டான்ஜெட்கோவின் நிலுவகை கடன் 2019 -20 ஐந்தாண்டு காலத்தில் 81,312 கோடியில் இருந்து 1.23 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. மேலும் வங்கி, நிதி நிறுவனங்களுக்கு 503 கோடி அளவிற்கு காலம் கடந்த அபராத வட்டியை செலுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் டான்ஜெட்கோ வட்டிச் செலவை குறைப்பதாக கடன்களை ஆய்வு செய்து மறுசீரமைக்கலாம், தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு குறைப்பை துல்லியமாக கணக்கிடலாம் என்பது உள்பட 4 பரிந்துரைகளை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளோம்.

தமிழக அரசின் 27 நிறுவனங்கள் மற்றும் கழகங்கள் 1,205 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இதில் 1011 கோடி ரூபாய், எரிசக்தி, தொழில்கள், குறு,சிறு, மற்றும் நடுத்தர குடும்பங்களை சாரந்தது ஆகும். அதேநேரம், 31 பொதுத்துறை நிறுவனங்கள் 18,629 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன.” எனவும் முதன்மை அக்கவுன்டன்ட் ஜெனரல் அம்பலவாணன் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry