கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிக்கினர்! வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!

0
493

இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமர் மோடி குறித்த நூலில் அம்பேத்கரையும், மோடியையும் ஒற்றுமைப்படுத்தி இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். இதற்காக இளையராஜாவிற்கு எதிராக திமுக, விசிக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இளையராஜாவை பாஜகவினர் ஆதரித்தனர்.

ஈரோட்டில் நடந்த விழா ஒன்றில் இளையராஜா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசிய பேச்சு கடும் விமர்சனத்தை உருவாக்கியது. ” உணவுக்கு வழியில்லாமல் இருந்த நிலையில் கம்யூனிஸம் பேசிவிட்டு, பணமும், புகழும் வந்தவுடன் தங்களை உயர்ந்த சாதி என நினைத்துக் கொள்கிறீர்களே” என அவர் விமர்சித்து பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்களும் எழுந்தன.

இதுகுறித்து பறையர் பேரியக்கத்தின் தலைவர் சிவகுரு பறையனார், புரட்சி தமிழகம் அமைப்பின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி ஆகியோர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை ஆணையம் பதிவு செய்துகொண்டது. அத்துடன், 15 நாட்களுக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், தவறினால் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியது.

சே. சிவகுரு பறையனார்

அத்துடன், இந்தப் புகாரின் அடிப்படையில், பட்டியலின சமூகம் குறித்து இழிவாகப் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி மற்றும் மேடையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த உத்தரவு கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இருவரும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry