புத்தகத்தை பார்த்து ஆன்லைன் செமஸ்டர் தேர்வெழுதலாம்! அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி!

0
1193

மே மாதம் நடைபெற உள்ள பொறியியல் செமஸ்டர் தேர்வை, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

கொரொனோ பாதிப்பு காரணமாக கடந்த முறை நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளை பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளை கொண்டு ஆன் லைன் வழியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. தற்போது அந்த முறையை அண்ணா பல்கலைக்கழகம் சற்றே மாற்றி, வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது. அதன்படி விடை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை அளிக்கலாம். அதேபோன்று தேர்வின்போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இறுதி செமஸ்டர் தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. புதிய நடைமுறை வினாத்தாளில் பார்ட்வில் பத்து மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருக்கும். அதாவது, 5 இரண்டு மதிப்பெண் கேள்விகள். பார்ட் – Bல், மொத்தம் 40 மதிப்பெண்கள். அதாவது 5 எட்டு மதிப்பெண் கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.  பார்ட் – Bல், ஐந்து அலகுகளில் இருந்தும் கேள்விகள் இடம்பெறும், சாய்ஸ் கிடையாது.

மாணவர்கள் 12 பக்கங்களுக்கு மிகாமல் விடையளிக்க வேண்டும். தேர்வெழுதி முடித்தபிறகு, விடைத்தாளை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். 50 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வானது, ஒன்றரை மணி நேரம் நடக்கும். கடைசி ஆண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்டதுபோல, சாய்ஸ் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry