கீரைகள் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனைகளா? ஒரு நாளைக்கு எத்தனை கிராம் கீரைகளை உணவில் சேர்க்கலாம்?

0
5192

பிகாம்ளக்ஸ், வைட்டமின் சத்துகளை கீரைகள் கொண்டுள்ளது. ஆனால் கீரைகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. கீரை வகைகளை எந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. அறக்கீரை, சிறுகீரை, வெந்தயக் கீரை, பாலக் கீரை, தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கக் கீரை, புதினா தழை போன்றவை அதிகளவில் உணவில் சேர்க்கப்படுகிறது.

இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கீரைகள் கொண்டுள்ளன. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம். கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்சி போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். கீரைகளிலுள்ள கரோடின்களை பாதுகாக்க, நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும். கீரைகள் பிகாம்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சத்துக்களையும் கொண்டுள்ளது. கீரையில் ஆன்டி ஆக்சிடண்ட்களும் உள்ளன.

சத்துகள் நிறைந்து இருந்தாலும், நாம் இதை அளவாகவே பயன்படுத்துதல் வேண்டும். பெண்கள் ஒரு நாளைக்கு 100 கிராம்,  ஆண்கள் ஒரு நாளைக்கு 40 கிராம்,  4-6 வயது சிறுவர், சிறுமியர் ஒரு நாளைக்கு 50 கிராம்,  10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு மட்டுமே கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உணவில் கீரை வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டால், நமது உடலில் பல்வேறு எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இதை அதிகம் எடுத்துக் கொண்டால், அது உடலில் கால்சியம் ஆக்சலேட்டாக படிகிறது. இதன் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். பச்சிளம் குழந்தைகளுக்கு கீரை வகைகளை அதிகம் சாப்பிட கொடுத்தால், அவர்களுக்கு செரிமான பிரச்சினைகள் ஏற்படும்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடன், கீரையில் உள்ள வைட்டமின் கே இணைந்து, ரத்த அழுத்தத்தை குறைத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அதிகளவில் கீரை வகைகளை சேர்த்துக் கொண்டால், உடலில் வாய்வு பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது.

கீரை வகைகளில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால், அது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது பேதி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். உணவே மருந்து என்ற அடிப்படையில், சத்துகள் குவிந்திருக்கும் கீரை வகைகளையும் பரிந்துரைக்கப்பட்ட அளவே சாப்பிடுவது சிறந்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry