ரூ.350 மதிப்புள்ள பேனருக்கு ரூ.8,000 கணக்கு! மதுபானம், மருந்து கொள்முதலில் பெரும் ஊழல்! ஆளுநரை உசுப்பிவிட்ட ஈபிஎஸ்!

0
184

சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை, தமிழக அரசில் நடைபெறும் வரும் ஊழல், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. இதுகுறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. கோவை சம்பவத்தை தமிழக உளவுத் துறை சரியாக கையாளவில்லை.

Also Watch : ரவீந்திரன் துரைசாமி மன்னிப்பு கேட்டேயாகனும்…! #ADMK வை சீண்டினால் தக்க பதிலடி | ‘Amma’ Gopi

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல்துறை முறையாக விசாரணை செய்யவில்லை.
தமிழகத்தில் போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. டன் கணக்கில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதிகாரிகளை இடமாற்றம் செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடாது.

திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். திமுக ஆட்சியில் தற்போது மருந்து தட்டுப்பாடு என்பதை அமைச்சரே ஒத்துக்கொண்டுள்ளார்.நோய் எதிர்ப்பு மருந்து உள்ளிட்ட மருந்துகள் கையிருப்பில் இல்லாத சூழல் உள்ளது. மருந்து கொள்முதலில் ஊழல் நடந்து வருகிறது. காலாவதி மருந்தும் பயன்பாட்டில் உள்ளது. அதிமுக ஆட்சியில் தடையின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன. மருந்து தட்டுப்பாடு வருவதற்கு திறமையற்ற அரசாங்கம்தான் காரணம்.

உள்ளாட்சி அமைப்பில் முடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் பணிகளை விளம்பரப்படுத்தும் ‘நம்ம ஊரு சூப்பரு’ விளம்பர பேனரில் மெகா ஊழல் நடந்துள்ளது. பேனர் விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தை மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் அரசு வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது. ரூ. 350 மதிப்புள்ள ஒரு பேனருக்கு ரூ. 7,906 செலவு செய்வதாக கணக்கு காட்டியுள்ளனர். பணி செய்வதற்கு முன்னரே, திமுக அரசு நிதி வழங்கி விடுகிறது. இதுவே திமுக ஊழலுக்கு உதாரணம். உள்ளாட்சிக்கான நிதி மற்ற துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Also Watch : தண்ணீருக்கும் கேன்சருக்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பு! Powerful Truth about Cancer

தமிழகம் முழுவதும் டெண்டரே விடாமல் சட்டவிரோதமாக மதுபார்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுபான கொள்முதலில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அனைத்துத் துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திமுக அரசு என்றாலே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான். இந்த ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன் என்பதுதான் தாரக மந்திரமாக உள்ளது. திராவிட மாடல் என்றால் கமர்சியல், கலெக்ஷன், கரப்ஷன் என்று தான் உள்ளது. எந்தத் துறை எடுத்தாலும் அதில் லஞ்சம் தான் உள்ளது. லஞ்சம் இல்லாத துறையே தமிழகத்தில் இல்லை, இதையும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

ஆளுநரை திமுக விமர்சிப்பது வாடிக்கையான ஒன்று. ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆளுநர்தான் திமுகவை தட்டிக்கேட்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம். ஊடகங்களைத் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தைக் காப்பாற்றுங்கள். உண்மை சம்பவங்களை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry