விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்கள்! பல ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கின!

0
118

தமிழகத்தில் காற்றதாழ்வு, காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நேற்று இரவு மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ள.

வங்கக் கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த அதி கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அனைத்து  கிராமங்களும்,  நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

Also Read : 16-ந் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது! பம்பையை சுத்தம் செய்யும் பணியில் தமிழக பக்தர்கள்!

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 31 சென்டிமீட்டர் மழையும், செம்பனார்கோவில் பகுதியில் 24 சென்டிமீட்டர் மழையும், பொறையாறு பகுதியில் 18 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

சீர்காழி பகுதியில் ஓடும் உப்பனாற்றின் கரை உடைத்துக்கொண்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்திருப்பதால், சீர்காழி அடுத்துள்ள சூரக்காடு பகுதியில் கிட்டத்தட்ட 300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் கொட்டும் மழையில் உயிருக்கு பயந்தபடி வீட்டுக்குள் படுக்கவும் முடியாமல் இரவு முழுவதும் மக்கள் பெரும் சிரமப்பட்டனர்.

Also Read : EWS சட்டத்தை உருவாக்க துணைபுரிந்த திமுக இப்போது இரட்டை வேடம் போடுகிறது! அதிமுக கண்டனம்!

விடிந்ததும் இடுப்பளவு தண்ணீரில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.  மாவட்ட நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அரசின்  நிவாரண மையத்தை நோக்கிச் சென்று வருகின்றனர். கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆரப்பள்ளம், புளியந்துரை, ஆச்சாள்புரம், மகேந்திரப்பள்ளி, வெட்டத்தாங்கரை என பெரும்பாலான கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன.

மயிலாடுதுறையில் 60ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பல கிராமங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதீத கன மழையால்  சீர்காழி பகுதியில் மட்டும் 35 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சம்பா பயிர்கள் முற்றிலுமாக மூழ்கி இருப்பதால் அவை இனி காப்பாற்றுவது கடினம் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திரூவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. கனமழை காரணமாக மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளன. இதனால் 19 வீடுகள் இடிந்து சேதமானதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக, சிதம்பரத்தில் 31 செ.மீ மழையும், புவனகிரியில் 21 செ. மீ மழையும், காட்டுமன்னார் கோவில் பகுதியில் 19 செ.மீ மழையும், குறிஞ்சிப்பாடியில் 16 செ. மீ மழையும், லால்பேட்டையில் 13. செ.மீ மழையும் கொட்டி தீர்த்துள்ளது.

கோவை, ஈரோடு திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நேற்று மாலை பெய்ய ஆரம்பித்த கனமழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத மழையளவு பதிவாகியுள்ளது. கோவை மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூரில் 10 செ.மீ மழையும், ராசிபுரத்தில் 9 செ.மீ மழையும், புதுச்சத்திரம் பகுதியில் 7 செ.மீ. மழையும் பதிவானது.

Also Read : 35 ரூபாயாக இருந்த கரன்ட் பில், இப்போது 2 ஆயிரம் ரூபாய்! அதிரவைக்கும் மின்வாரியம்! இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு!

சென்னையை பொறுத்தவரை தென்சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. வட சென்னையில் பெரும் மழை இல்லை. கிண்டி, வேளச்சேரி, வடபழனி, அசோக் நகர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், ஆவடியில் 8 செ.மீ மழையும், பொன்னேரியில் 7 செ.மீ மழையும், திருத்தணியில் 5 செ.மீ மழையும் கொட்டி தீர்த்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry