16-ந் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது! பம்பையை சுத்தம் செய்யும் பணியில் தமிழக பக்தர்கள்!

0
181

சபரிமலை அய்யன் கோயில் நடை மகரவிளக்கு தரிசனத்திற்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் கேரள தேவசம்போர்டு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. பம்பை ஆற்றை சுத்தம் செய்ய தமிழக பக்தர்கள் முகாமிட்டுள்ளனர்.

வரும் 16-ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. 17-ம் தேதி முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. டிசம்பர் 27 இரவு நடை அடைக்கப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.

Also Read : EWS சட்டத்தை உருவாக்க துணைபுரிந்த திமுக இப்போது இரட்டை வேடம் போடுகிறது! அதிமுக கண்டனம்!

மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ம் தேதி நடக்கிறது. சபரிமலை நடை ஜனவரி 20-ம் தேதிவரை திறந்திருக்கும். சபரிமலைக்கு செல்வோர் இம்முறை முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக பம்பை, நிலக்கல் பகுதிகளில் 13 இடங்களில் ஆன்லைன் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு இத்தனை பக்தர்கள்தான் என எதுவும் வரையறுக்கப்படவில்லை. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டையைக் கொண்டுவர வேண்டும் எனவும், சபரிமலை வருவோருக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலச்சூழலுக்கு பின்பு முதன் முறையாக இப்போது எருமேலி, அழுதா, கரிமலை பாதை பக்தர்களுக்காகத் திறக்கப்படுகிறது. இந்த வழியில் செல்லும் பக்தர்களுக்குத் தண்ணீர் மற்றும் உணவுத் தேவையைத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

Also Read : 35 ரூபாயாக இருந்த கரன்ட் பில், இப்போது 2 ஆயிரம் ரூபாய்! அதிரவைக்கும் மின்வாரியம்! இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு!

இந்நிலையில் சபரிமலையின் பல்வேறு பகுதிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் புண்ணிய நீராடிச் செல்லும் பம்பை ஆறு, மற்றும் பம்பை வளாகப் பகுதிகளை சுத்தம் செய்ய அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் தமிழகக் குழுவிடம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தின் கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப சேவா சங்க பக்தர்கள் 110 பேர் பம்பை வளாகத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry