FEI World Equestrian Dressage Challenge 2022 குதிரையேற்றப் போட்டியில் சென்னையின் இளம் வீராங்கனைகள் புதிய உச்சத்தை தொட்டதுடன், மீண்டும் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள ஏஎஸ்சி மையத்தில் கடந்த வாரம் இந்தப் போட்டி நடைபெற்றது.
இந்தியாவில் நடைபெறும் குதிரையேற்ற போட்டிகளில் மதிப்புமிக்க சர்வதேச நிகழ்வாக இந்தப் போட்டி கருதப்படுகிறது. நீதிபதிகள் வெவ்வேறு நாடுகளில் பயணம் செய்து ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த ரைடர்களை தீர்மானிக்கிறார்கள்.
யூத் கேட்டகரி பிரிவில் 14 வயதான சமன்னா எவேரா இந்தியாவுக்கு மீண்டும் தங்கம் வென்று கொடுத்துள்ளார். இவர் 3 வயதில் இருந்தே குதிரையேற்ற போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக தனது ஜெர்மன் இனக் குதிரையான சோல்மேட் (அதிகாரப்பூர்வ பெயர்: செஸ் ரிச்டிஜ்) உடன் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமன்னா எவேராவின் பயிற்சியாளர் இஸபெல் ஃபுட்னானி,
இந்த டிரெஸ்ஸேஜ் போட்டியில் வெற்றிபெற வேண்டுமானால், சவாரியை சிரமமாக்கிக் கொள்ளாமல், குதிரையுடன் இணக்கமாக பழக வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் பயிற்சி தேவை. மேலும், சரியான குதிரையைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அதனுடன் வலுவான கூட்டாண்மையை வளர்த்துக் கொள்வதும் மிகவும் முக்கியம்.
எனது மாணவர்களின் செயல்பாடு பெருமையளிப்பதாக உள்ளது. தென் மண்டலத்திலிருந்து தாஷா (13 வயது) மட்டுமே இந்திய அணிக்கு தேர்வானார். இவருடன் டெல்லியைச் சேர்ந்த 3 ரைடர்களும் தேர்வாகினர். மிகவும் அர்ப்பணிப்புடன் தினமும் மூன்று குதிரைகளில் தாஷா சவாரி செய்கிறார். Chennai Equitation Centre நிறுவனர் கிஷோர் ஃபுட்னானி, இளம் மாணவர்களை சரியாக ஊக்குவிக்கிறார். குதிரைகள் மற்றும் சவாரிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த வசதிகளை அவர் உருவாக்கியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ரைடர்களை தயார்படுத்த வேண்டும் என்பது எங்கள் கனவு, ஆனால் அது நீண்ட பயணம். டிசம்பரில் போபாலில் நடைபெறும் ஜூனியர் நேஷனல் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் சமன்னா, தாஷா மற்றும் ஐந்து மாணவர்கள், டிரஸ்ஸேஜ் மற்றும் ஷோ ஜம்பிங்கில் போட்டியிட உள்ளனர் என்று இஸபெல் ஃபுட்னானி தெரிவித்தார்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த இஸபெல் ஃபுட்னானி, இந்தியாவில் இளம் திறமையான ரைடர்களுக்கு 15 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறார். பிரிக்ஸ் செயிண்ட் ஜார்ஜஸ் போன்ற உயர் பிரிவுகளில் அவர் தங்கம் வென்றுள்ளார். தென் மண்டலத்தில் முதலாவது இடத்தையும் பிடித்தார்.
FEI DRESSAGE WORLD CHALLENGE
South Zone Results:
Youth Winner: Samanna with Sechs Richtige
Senior I Winner: Isabelle with Jack Daniels
Prix Saint Georges Winner: Isabelle with Lamborghini
Youth Third: Samanna with Jack Daniels
Youth Fourth: Tasha with Sechs Richtige
Youth Fifth: Tasha with Lamborghini
INDIA RESULTS:
YOUTH Winner: Samanna on Sechs Richtige
Prix Saint Georges Winner: Isabelle on Lamborghini
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry