35 ரூபாயாக இருந்த கரன்ட் பில், இப்போது 2 ஆயிரம் ரூபாய்! அதிரவைக்கும் மின்வாரியம்! இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு!

0
113

மின் கட்டணத்தைக் கண்டு நுகர்வோர் அரண்டு போயிருக்கின்றனர். குறிப்பாக அடுக்கு மாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததுள்ளதாக நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம், 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் வேலையை தமிழக மின்வாரியம் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

சென்னை உட்பட மாநிலம் முழுதும், பல வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்புகளின் வளாகத்தில் உள்ள விளக்குகள், கூட்ட அறை, லிஃப்ட், மோட்டார் பம்ப், ஜிம் போன்றவற்றை உள்ளடக்கிய, ‘காமன் சர்வீஸ்’ எனப்படும் பொது சேவைகளுக்கு, தனி மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்ட கட்டணத்தின்படி தண்ணீர் மோட்டார்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Also Read : #NIA Raid | 45 இடங்களில் அதிரடி சோதனை! 18 பேருக்கு ISIS இயக்கத்துடன் தொடர்பிருப்பது கண்டுபிடிப்பு!

அதுமட்டுமின்றி தண்ணீர் மோட்டார்களுக்கு 300 யூனிட்டுக்கு ரூ.3,200ம், 500 யூனிட்டுக்கு 4,800 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம், மாதம் 30 முதல் 80 ரூபாய் வரை செலுத்தி வந்தவர்கள், தற்போது 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். உதாரணமாக, கடந்த சுழற்சியின்போது பயன்பாடு அளவீட்டின்படி 35 ரூபாயாக இருந்த மின் கட்டணம், இந்த மாதம் 2 ஆயிரத்து 35 ரூபாயாக வந்திருக்கிறது. இதுதான் திராவிட மாடல் அரசா என்று நுகர்வோர் வினவுகின்றனர்.

தமிழகத்தில் 3.5 கோடி மின் நுகர்வோர் உள்ள நிலையில், 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் வேலையை தமிழக மின்வாரியம் தொடங்கிவிட்டது. அதற்கான முதல்படியாகத்தான் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 100 யூனிட் இலவச மின்சார பயனாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.

Also Read : வசூல்ராஜா பட பாணியில் ராகிங்! சீனியர்கள் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்! குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை!

உதாரணத்திற்கு ஒரு வீட்டில் அப்பா-அம்மா, மகன்கன் / மகள்கள் என 4 குடும்பம் தனித்தனியாக இருந்தால், 4 மின் இணைப்பு மூலம் கட்டணம் செலுத்தப்படும். முந்தைய அதிமுக ஆட்சி வரை இந்த 4 மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவசமாக கிடைத்தது. தற்போது இந்த 4 பேரில் ஒருவருக்கு மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். அதாவது வீட்டு உரிமையாளராக அப்பா இருந்தால், அவரது பெயரிலான இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். மற்ற மூவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும்.

கடந்த செப்டம்பர் மாதம் 54% மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே தொழில்துறைக்கு உச்சபட்ச கட்டணம் தமிழ்நாட்டில்தான் வசூலிக்கப்படுகிறது. விசைத்தறி தொழிலுக்கு 31% மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சிறு, குறு, நடுத்தர (MSME) தொழில்களுக்கு நிலைகட்டணம், Peak Hour Tariff என கட்டணமானது 40% வரை உயர்த்தபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், Peak Hour Tariffஐ 10% குறைத்து விட்டு, மொத்த கட்டணத்தில் 10% குறைத்தது போல் அமைச்சர் கூறுகிறார்.

Also Read : முன்னாள் ஐ.ஜி. ஜாபர் சேட், கருணாநிதியின் செயலாளர் குடும்ப சொத்துக்கள் முடக்கம்!அமலாக்கத்துறை அதிரடி!

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்கும் வகையில், மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டுவரப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில், வரிசை எண் 221ல் கூறியிருந்தது. அதேபோன்று மின்சாரக் கட்டணத்துடன் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் நிலைக்கட்டணம் 50 ரூபாய் தடை செய்யப்படும் என்றும் வரிசை எண் 222ல் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இதையெல்லாம் திமுக மறந்தேவிட்டது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry