சாக்குப் பையிலேயே முளைத்த நெல் மணிகள்! வீணாய்போன ஆயிரம் டன் நெல் மூட்டைகள்!

0
125

மதுரை மாவட்டம், தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கு உள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெற்கதிர்கள், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. அத்தகைய பிரம்மாண்டமான இடவசதியை கொண்ட மிகவும் முக்கியமான சேமிப்பு கிடங்காக இது உள்ளது.

இந்தக் கிடங்கில் பொதுவாக ஒரு பாதி இடத்தில் திறந்தவெளியில் நெல் மூட்டைகளை அடுக்கி தார்ப்பாய்கள் போட்டு மூடி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது. இச்சூழலில், கடந்த ஒரு வாரமாக மதுரையில் பெய்த தொடர் மழையின் காரணமாக, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தாலும் மழைநீரில் நனைந்து, முளைத்து வீணாகி உள்ளது.

Also Read : விளம்பரங்களில் மூழ்கிக் கிடக்கும் விடியா அரசு! மழையால் பாதித்தவர்களுக்கு உதவ கட்சியினருக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்!

சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் இதுபோன்று மழையில் நனைந்து வீணாகிவிட்டது. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுபோன்று, திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளை முழுமையாக பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry