லிங்க தீட்சை பெற்ற ராகுல் காந்தி! கர்நாடக தேர்தலுக்கான நாடகமா?

0
195

முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க அக்கட்சி எம்.பி., ராகுல் கர்நாடகா சென்றுள்ளார்.
சித்ரதுர்கா மாவட்டம் சென்ற ராகுல், அங்குள்ள ஸ்ரீமுருக ராஜேந்திர மடத்திற்கு சென்றார்.

இது லிங்காயத் சமூக மடமாகும். காங்கிரஸ் நிர்வாகிகள் சிவகுமார் , வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். அங்கு, ராகுல் மடாதிபதிகளை சந்தித்து பேசினார்.

அப்போது ராகுல் கூறுகையில், பசவண்ணாவின் கொள்கைகளை படித்துள்ளேன். அதனை பின்பற்றி வருகிறேன். எனவே இங்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது. உங்கள் முன் கோரிக்கை வைக்க விரும்புகிறேன். இஷ்டலிங்கம் மற்றும் சிவயோகா குறித்து விரிவாக கற்றுத்தர ஒருவரை அனுப்பி வையுங்கள். அதன் மூலம் நான் பயன்பெறுவேன் என்றார்.

ஹவேரி ஹோசா மடாதிபதி பேசும் போது, இந்திரா பிரதமர் பதவி வகித்துள்ளார். ராஜிவும் பிரதமர் பதவியை வகித்துள்ளார். ராகுலும் லிங்காயத் சமுதாயத்தில் இருந்து துவங்கியுள்ளார். அவரும் பிரதமர் ஆவார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஸ்ரீமுருக ராஜேந்திர மடாதிபதி டாக்டர் ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணரு, இங்கு அவ்வாறு பேச வேண்டாம். அதற்கான இடம் இது அல்ல. பிரதமர் ஆவது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். இதனை தொடர்ந்து, மடாதிபதி டாக்டர் ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணருவிடம் இருந்து ராகுல், லிங்க தீட்ஷை பெற்று கொண்டார்.

பொதுவாக இந்த சடங்குகளை, லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இஷ்டலிங்கத்தை அணிந்தபடி மேற்கொள்வார்கள்.

Also Read : அரசுப் பள்ளிகளில் ஆங்கில ஆய்வகங்கள்! மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை முயற்சி!

இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள், கர்நாடகாவில் 17 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க.வை ஆதரிப்பவர்கள். அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாலேயே லிங்காயத் மடத்திற்கு சென்று ராகுல் தீட்சை பெற்றுள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry