காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போட்டிருந்தால்தான் ‘ஏர் பேக்’ வேலை செய்யும். எனினும், இந்தியாவைப் பொறுத்தவரை பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவர்கள் சீட் பெல்ட் போடுவதை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.
தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியா? ஜார் மன்னன் ஆட்சியா? திருச்சி சம்பவத்தை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் கடும் விமர்சனம்!
“காவல் துறையை தன் கைவசம் வைத்துள்ள இந்த அரசின் முதல்வர், காவல் நிலையத்தைத் தாக்கியவர்களை அடக்கி ஒடுக்காமல், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
500 ரூபாய் கள்ள நோட்டுகள் இரு மடங்கு உயர்வு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
கடந்த 2016ம் ஆண்டு உயர் மதிப்புகளை கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழந்ததாக பிரதமர் மோடி அறிவித்தார். உயர் மதிப்புள்ள நோட்டுகளால் தான் ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு புழக்கம் போன்ற மோசடிகள் நடப்பதாக கூறிய மத்திய அரசு, அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது.
சென்னையை உலுக்கும் ஒலி மாசு: இரத்த அழுத்தம் முதல் மனநலம் வரை – தவிக்கும் போக்குவரத்து காவலர்கள்..!
சென்னை போக்குவரத்துக்கு ஓய்வே இல்லை. நெல்சன் மாணிக்கம் சாலை – அமைந்தகரை சந்திப்பு உள்பட பல்வேறு பரபரப்பான பகுதிகளில், சத்தம் நிறைந்த ஹாரன்கள் மற்றும் அதிவேக வண்டிகளின் இரைச்சலுக்கு மத்தியில், ஒரு போக்குவரத்துக் காவலர் கிட்டத்தட்ட பகல் முழுவதும் பணியில் இருக்கிறார்.
தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாள் நினைவேந்தல் கூட்டம்! ராஜா வாசுதேவனின் புத்தகம் வெளியீடு!
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் 60-வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘அஞ்சலை அம்மாள்’ புத்தகம் எழுதிய, ஊடக ஜாம்பவானும், எழுத்தாளருமான ராஜா வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஓலா, ஏதர்-க்கு டஃப் கொடுக்க வருகிறது ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக்! ஒரே மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ்! விலை இவ்வளவு குறைவா?
ஸ்கூட்டர் பிரிவில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா நிறுவனம் ஜுலை மாதம் ஆக்டிவா இ-ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் இன்றுவரை மிகவும் சக்திவாய்ந்த வரம்பைக் கொண்டிருக்கும் என தெரிகிறது.
ஆரோக்கியத்துக்கும், செல்வச் செழிப்புக்கும், தீபாவளிக்கும் என்ன தொடர்பு? அதிசயிக்க வைக்கும் ஆன்மிகமும், அறிவியலும்!
தீபாவளியை பண்டிகை என்று சொல்வதைவிட, திருவிழா என்று சொல்வதே சரியாக இருக்கும். 5 நாள் கொண்டாட வேண்டிய இந்த தீபாவளியானது, ஆன்மிகமும், அறிவியலும் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது.
