தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாள் நினைவேந்தல் கூட்டம்! ராஜா வாசுதேவனின் புத்தகம் வெளியீடு!

0
141

சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் 60-வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘அஞ்சலை அம்மாள்புத்தகம் எழுதிய, ஊடக ஜாம்பவானும், எழுத்தாளருமான ராஜா வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அஞ்சலை அம்மாள் மன்றம்சார்பில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்துக்கு, மன்றத்தின் தலைவர் மணிவாசகன் தலைமை ஏற்றார். ராஜா வாசுதேவன் எழுதியுள்ளஅஞ்சலை அம்மாள்புத்தகத்தை, விழா மேடையில் அமைச்சர் எம்.சி. சம்பத் வெளியிட்டார். விழாவில் பேசிய ராஜா வாசுதேவன், கடலூரில் இருபது வீடுகளைக் கொண்ட ஒரு வீதிக்கு அஞ்சலை அம்மாள் பெயரை வைப்பதுதான் அவருக்குச் செய்யும் பெருமையா? என தனக்கே உரித்தான பாணியில் வினவினார்.

முன்னதாக, அஞ்சலை அம்மாளின் போராட்ட வரலாறை இந்தியாவில் உள்ள அனைத்துமொழிகளிலும் அனைவரும் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும், நாடாளுமன்றத்தில் அவரது சிலை வைக்க வேண்டும் என்றுகூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் தியாகத்தை போற்றும் வகையில் கடலூரில் நூலகத்துடன் கூடிய நினைவு இல்லம் அமைத்து தர வேண்டும், அவரது பிறந்த நாளான ஜூன் 1-ம் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

அதேபோல், கடலூரில் அமைய உள்ள பேருந்து நிலையத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும், அவரது வரலாறை அனைவரும் நினைவூட்டும் வகையில் கடலூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு அரசு பள்ளிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும், அவரது வரலாறை தமிழக அரசு பாட புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்பது போன்ற தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதுநாள் வரை குடத்திலிட்ட விளக்காய் இருந்த அஞ்சலை அம்மாள் யார்?, அவரது தியாகம் எந்த அளவு போற்றத்தக்கது? என்பதை வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்த்து வருபவர் எழுத்தாளர் ராஜா வாசுதேவன்.

அத்தோடு நில்லாமல், அஞ்சலை அம்மாளை உலகறியச் செய்ய வேண்டும் என்ற பெரு முயற்சியிலும் அவர் இறங்கியிருக்கிறார். தேசத்தந்தை காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சிராணி என போற்றப்பட்ட அஞ்சலை அம்மாளை, தற்போது பேசு பொருளாக்கிய பெருமை அவரையே சாரும். அஞ்சலை அம்மாளின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் சேர்க்க ராஜா வாசுதேவன் எடுத்துவரும் முன்னெடுப்புகளுக்கு வேல்ஸ் மீடியா வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், உறுதுணையாகவும் இருக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry