காடுகள், நிலக்கரி, ஆற்றுமணல், நீர்நிலை என இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளால் கொண்டுவரப்படும் சட்டங்கள் குறித்து விவாதிக்கும் நோக்கில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் `இயற்கை வள உரிமைக்கான கருத்தரங்கம்’ சென்னையில் சனிக்கிழமை(27 MAY 2023)நடைபெற்றது.
ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதா? தமிழக அரசுக்கு பாமக கடும் எதிர்ப்பு!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படவுள்ள 60 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பெரும் பகுதி ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
பற்களை எந்த பேஸ்ட்டில், எவ்வளவு நேரம், எப்படி துலக்க வேண்டும்? பல் துலக்கும் தெளிவான வழிமுறைகள்!
உலகளவில் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படும் பிரச்னைகளில் முதன்மையானதாக இருப்பது பல் மற்றும் வாய் சம்பந்தபட்ட நோய்கள்தான். 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேலான மக்கள் பல் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் சரியாக பல் துலக்காமல் இருப்பதே 99சதவீத பல் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது” என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பி.ஆர். ஏஜென்சிகள் மூலம் அணிக்கு தேர்வாகும் வீரர்கள்..! திறமைக்கு மரியாதை இல்லை என பரபரப்பை பற்ற வைத்த ஹர்ஷா போக்ளே!
இந்திய கிரிக்கெட் அணித்தேர்வைத் தீர்மானிப்பவர்கள் வீரர்களின் பி.ஆர் நிறுவனங்கள்தான் என்று (Public Relations Agencies) குற்றம்சாட்டியுள்ள மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, வீரர்கள் இத்தகைய ‘லாபி’யின் மூலமே தேர்வு செய்யப்படுகின்றனர் என்று விமர்சித்துள்ளார்.
காலாவதி தேதி முடிந்த உணவுகள் கெட்டுவிடும் என்பது உண்மையா? அதை சாப்பிடவே கூடாதா? Myth Busted! Food Expiration Dates: What to Know?
3.30 Mins Read : கடையில் பொருட்கள் வாங்கும் போது, பாக்கெட், கேன்கள் அல்லது பாட்டிலில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை பார்த்திருப்போம். இன்றைய காலகட்டத்தில் நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் பேக்கேஜ் வடிவத்தில் தான் கிடைக்கின்றன. பாக்கெட்டின் மேல் இரண்டு தேதிகள் எழுதப்பட்டிருக்கும். ஒன்று இந்த பொருள் இந்த மாதத்தில், இந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்றும், இன்னொன்று இந்த தேதிக்குப் பிறகு காலாவதியாகும் என்பதையும் குறிக்கும். காலாவதி தேதிக்குப் பிறகு அந்த உணவை சாப்பிடவே கூடாதா? என்பதுதான் கேள்வியே.
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு! சுரேஷ் ரெய்னா அறிவிப்பு!
பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் குவித்துள்ளார். 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பிறகு, உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா, தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
