Friday, December 27, 2024
Home Blog Page 314

சிம்ப்பிள் வைத்தியம், ஆனா தரமான வைத்திய குறிப்புகள்

நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் பல்வேறு உடல்நலக்கோளாறுகளை சந்திக்க நேரிடுகிறது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சில எளிமையான சித்து மருத்துவக் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.

அஜீரணம்:

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.

வாயு தொல்லை:

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

மலச்சிக்கல்:

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

மூச்சுப்பிடிப்பு:

கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சருமநோய்:

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்:

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூக்கடைப்பு:

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

கொழுப்பு கரையனுமா…! இதை தினமும் சாப்பிடுங்க

தினமும் ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும்அதே வேளையில்கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறதுஇதில் காணப்படும்  பெக்டின் என்ற பொருள்உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடுநீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.

ஞாபக சக்திக்கு மட்டுமல்ல, மாதவிலக்க பிரச்னையையும் சரி செய்யும் வல்லாரை

வல்லாரைக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மிகுதியாக உள்ளன.

இரத்தத்தை சுத்திகரித்து, ஜீரண சக்தியை அதிகரிக்கும் புதினா

புதினா கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்வாய் நாற்றம் அகலும்ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும்மலச்சிக்கலும் நீங்கும்பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

antalya bayan escort