சென்னையில் பேட்டர்சன் புற்றுநோய் மையமும், புற்றுநோய் தணிப்பு அறக்கட்டளையும் இணைந்து நாளை தொடங்கி ஒரு மாதத்துக்கு இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்த உள்ளது.
டிபிஐ வளாகத்தில் அடுத்தடுத்து மயக்கமடையும் ஆசிரியர்கள்! தோல்வியில் முடிந்த அமைச்சர் பேச்சுவார்த்தை! முதலமைச்சர் தலையிட வலியுறுத்தல்!
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை(DPI) வளாகத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் என மூன்று வகையான ஆசியர்கள் சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் குடும்பத்தினருடன் போராடி வருகின்றனர்.
மத்திய அரசின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ்! ஆண்டுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?
மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் மருத்துவ காப்பீடு திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ரூ.8000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீடு பெறலாம். இதை 10 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்குத் தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு! சென்னை காவல் ஆணையர் உத்தரவு!
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
கோவிட்-19 வைரஸ் பெருக்கத்தை குறைக்கும் மூலிகை தேநீர்! ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
சீமை கற்பூரவள்ளி, காட்டு எள்ளு ஆகிய மூலிகை டீ அருந்தினால், உடலில் தொற்றிய கோவிட்-19 அதிகமாவது தடுக்கப்படுவதாக ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை ஆங்கிலத்தில் Sage, Perilla Herbal tea என அழைக்கின்றனர்.
