Sunday, July 6, 2025
Home Blog Page 8

காவல் நிலையத்தையே காக்க முடியாத திமுக ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? – இபிஎஸ் கடும் கண்டனம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் நேற்று இரவு புகுந்த முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள், “எங்கள் உறவினர்களை ஏன் கைது செய்தீர்கள்” எனக் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் இரவுப் பணியில் இருந்த தலமைக் காவலர் பால் பாண்டியை தாக்கிவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.

இதையறிந்த திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ய முற்பட்டார். போலீஸார் அவரை வி.சத்திரப்பட்டி கிராமத்துக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஆர்.பி. உதயகுமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கிராம மக்களுடன் இணைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தையே காக்க முடியாத முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, காவல்துறையால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம். ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை.

முதல்வர் ஸ்டாலினின் நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா முதல்வரே? காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன், மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &

காலையில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? – ‘சயின்ஸ்’ சொல்லும் அதிர்ச்சித் தகவல்!

“காபி குடிக்காதீங்க… உடலுக்கு தீங்கு!” என்று பலரும் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒரு முக்கிய ஆய்வு, இந்த பழைய நம்பிக்கைக்கு சவால்விடுகிறது.

வாட்ஸ் அப்புக்கு போட்டியாக எலான் மஸ்க்கின் ’எக்ஸ்-சாட்’..! மொபைல் எண் இல்லாமல் கணக்கு துவங்கலாம்..! அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் அசத்தல்!

சமூக ஊடக உலகில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி வரும் எலான் மஸ்க், தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் புதியதோர் பரிணாமத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதுதான், வாட்ஸ் அப் போன்று ‘எக்ஸ்-சாட்’ (XChat) எனும் அதிநவீன செய்தியனுப்பும் வசதி. பிட்காயின் பாணியிலான என்க்ரிப்ஷன் (குறியாக்கம்), தானாகவே மறையும் செய்திகள், எந்த வகை கோப்புகளையும் (file) அனுப்பும் திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த வசதி தற்போது பீட்டா (beta) சோதனையாளர்களுக்குக் கிடைக்கிறது.

வாழைப்பழ டீ: இந்த ‘அதிசய பானம்’ உங்களுக்கு தெரியுமா? – ஆரோக்கிய நன்மைகள், தயாரிக்கும் முறை!

வாழைப்பழைத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை நேரடியாக உரித்து சாப்பிடுவது முதல், ஸ்மூத்திகள், ஐஸ்கிரீம் எனப் பல வழிகளில் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், வாழைப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் ‘வாழைப்பழ டீ’ (Banana Tea) பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு தனித்துவமான, இனிப்பு மற்றும் காரச்சுவை கலந்த ஆரோக்கியமான பானமாகும்.

காஞ்சிபுரம் ரவா பொங்கல்! சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்யணும் தெரியுமா?

காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பொங்கல் என்றால் பிடிக்குமா? அப்படியானால் வழக்கமாக செய்யும் அரிசி மற்றும் பருப்பைக் கொண்டு பொங்கல் செய்யாமல், ஒருமுறை ரவை மற்றும் பருப்பைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள்.

மாநில கல்விக் கொள்கையை உடனடியாக வெளியிட வேண்டும் – கோச்சிங் சென்டர்களை தடை செய்யவும் ஐபெட்டோ வலியுறுத்தல்!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக, தமிழக அரசு வடிவமைத்துள்ள மாநில கல்விக் கொள்கை (SEP) அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படாதது குறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (AIFETO – ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

🔎 தடயவியல் உலகை அதிர வைத்த AI! கைரேகைகள் தனித்துவமானவை அல்ல: புதிய ஆய்வு மூலம் நிரூபணம் – சட்ட அமைப்பில் புரட்சி!

நியூயார்க் : ”ஒவ்வொரு கைரேகையும் தனித்துவமானது” என்ற வழக்கமான நம்பிக்கையை முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு. இதுவரை குற்றவியல் வழக்குகளில் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட கைரேகை பகுப்பாய்வின் நம்பகத்தன்மையை இந்த கண்டுபிடிப்பு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. எர்த்.காம் இணைய இதழில் ஆங்கிலத்தில் வெளியான செய்தியை தமிழில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

antalya bayan escort