மார்ச்-1 முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்த முடிவு!

0
6

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 60 வயதைக் கடந்தவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.

ஜனவரி 16-ம் தேதி, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார்துறையில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுவருகிறது. அவர்களுக்கு தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை ஒரு கோடியே 21 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இரண்டாவது கட்டமாக மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதைக் கடந்த இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். நாடு முழுவதும் 10,000 அரசு மருத்துவ மையங்களும், 20,000 தனியார் மருத்துவமையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும். அரசு மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry