கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன்கள் ரத்து அறிவிப்பு! அவசரத் தேவைக்கு கடன் கிடைக்காமல் மக்கள் அவதி!

0
10

கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன்கள் ரத்து அறிவிப்பால் பொது மக்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அவசரத் தேவைக்கு கடன் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டு கடன் தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ள  நிலையில், கூட்டுறவு வங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் பட்டியலை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.

நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியானதற்குப் பின்னர் கிராமப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்க மறுப்பதாக பல இடங்களிலிருந்தும் புகார்கள் வருகின்றன. அதனால் பொதுமக்கள் அவசரத் தேவைகளுக்கு கடன் பெற முடியாமல் தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றுபவர்களிடம் இது குறித்து விசாரித்த போது, “நகைக்கடன்களை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் இதன் மூலம் உடனடியாக பயன்பெறுவார்கள். ஆனால் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு இந்தத் தொகையை திருப்பித் தர 5 ஆண்டுகள் வரை ஆகும். அதுவும் மொத்தமாக அந்தத் தொகையை தரமாட்டார்கள்.

உறுப்பினர்களின் டெபாசிட் தொகையை கொண்டு நகைக்கடன் வழங்கும் கிராமப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்களுக்கு நகைக்கடன் ரத்து அறிவிப்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு கடனை ரத்து செய்து நகைகளை திருப்பி கொடுத்துவிடுவார்கள். அரசு இந்த தொகையை தர தாமதப்படுத்தும் நிலையில், டெபாசிட் செய்த உறுப்பினர்கள் பணத்தை கேட்கும் போது சிக்கல் உருவாகும்.

அதே சமயம் தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்களில் இருந்து நேரடியாக நிதி பெறும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. நகைக்கடன் ரத்து எந்த தேதி வரை கணக்கிடப்படும் என்று இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால், தற்போது வைக்கப்படும் நகைகளும் சேர்த்து ரத்து செய்யப்படலாம்.

எனவே நிதியில்லாத கிராமப்புற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்களில் தற்காலிகமாக நகைக்கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம். அதே சமயம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் தொடர்ந்து நகைக்கடன் வழங்கப்படுகிறதுஎன்று கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry