வங்கிகளுக்கு ஏழு நாள்கள் விடுமுறை! மார்ச் 27 – ஏப்ரல் 4 வரை தொடர்ச்சியாக லீவு!

0
62

இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளுக்கு ஏழு நாள்கள் விடுமுறை வரவுள்ளது. எனவே வரும் 27-ம் தேதி முதல், ஏப்ரல் 4-ந் தேதி வரை ஏழு நாள்கள் வங்கிகள் இயங்காது.

வரும் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதிக்கு இடையிலான 9 நாள்களில் 7 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாக, சமீபத்தில் தான் 4 நாட்கள் வங்கி சேவைகள் தடைப்பட்டது. இந்த நிலையில் வரும் வாரத்திலும் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு 7 நாள்கள் விடுமுறை வரவுள்ளது.

வங்கி விடுமுறை நாள்களும் காரணங்களும்:

மார்ச் 27 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை விடுமுறை

மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை

மார்ச் 29 – ஹோலி பண்டிகை விடுமுறை

மார்ச் 30- ஹோலி பண்டிகையின் காரணமாக பாட்னாவில் மட்டும் விடுமுறை

மார்ச் 31 – நிதி ஆண்டு முடிவு விடுமுறை

ஏப்ரல் 1 – வங்கிக் கணக்கு முடிப்பு விடுமுறை

ஏப்ரல் 2 – புனித வெள்ளி விடுமுறை

ஏப்ரல் 4 – ஞாயிற்றுக் கிழமை

ஏப்ரல் 6 – தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் விடுமுறை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry