கார் விலையை உயர்த்துகிறது மாருதி சுஸூகி! உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டதாக விளக்கம்!

0
39

ஏப்ரல் 1-ம் தேதி முதல் கார் விலையை உயர்த்துவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகமாக இருப்பதால் அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் கார்களின் விலையை உயர்த்துவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

மாருதி சுஸுகி, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கார்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. சில ஆண்டுகளாகவே ஆட்டோமொபைல் துறையில் நீடிக்கும் மந்த நிலையால் மற்ற நிறுவனங்களைப் போலவே மாருதி சுஸுகி நிறுவனமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகமாக இருப்பதால், அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் கார்களின் விலையை உயர்த்த மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் கார்களின் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் இரண்டு முறை உயர்த்தியிருந்தது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி மீண்டும் விலை உயர்வை அறிவித்த மாருதி சுஸுகி, கார்களின் விலையை 34,000 ரூபாய் வரையில் உயர்த்துவதாக அறிவித்தது. டிசம்பர் மாதம் வெளியான அறிவிப்பில் 4.7 சதவீதம் வரையில் கார்களின் விலையை உயர்த்தியிருந்தது. இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மீண்டும் கார்களின் விலை உயர்த்தப்படுகிறது.

மாருதி சுஸுகியைத் தொடர்ந்து ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஜனவரி 1 முதல் கார்களின் விலை உயர்த்தப்படும் என்று அறிவித்தன. மகிந்திரா & மகிந்திரா நிறுவனமும்  1.9 சதவீதம் வரையில் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. எனவே மற்ற நிறுவனங்களும் ஏப்ரல் 1 முதல் விலை உயர்வை அறிவிக்கும் என்று தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry