அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா! பிரதமர் பங்கேற்றது மிகப்பெரிய பெருமை! முதல்வர் பேச்சு!

0
123

சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பேசிய பிரதமர், “அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கான எதிர்காலத்தை உங்களின் மனங்களில் ஏற்கெனவே நீங்கள் கட்டமைத்திருப்பீர்கள்.

எனவே, இன்றைய தினம் மட்டும் சாதனைகளுக்கான தினம் அல்ல, முன்னேற்றத்திற்கானதும் கூட. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள்தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்; இந்தியா உலகின் வளர்ச்சி எந்திரமாக உள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா உலகின் 2-வது பெரிய செல்பேசி தயாரிப்பாளராக இருந்தது. புதிய கண்டுபிடிப்பு என்பது வாழ்க்கையின் நெறியாக மாறியிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில்களின் எண்ணிக்கை 15,000 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடைமுறையின் காரணத்தை கட்டுப்படுத்துவது. வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது.

மாறிவரும் சூழ்நிலைகள் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு மகத்தான சுதந்திரத்தை புதிய தேசிய கல்விக் கொள்கை உறுதிசெய்கிறது. உங்களின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சியாகும். உங்களின் கற்றல், இந்தியாவின் கற்றலாகும். உங்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றியாகும்.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Also Read : இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை! செஸ் ஒலிம்பியாட் விழாவில் பிரதமரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்த இந்திய பிரதமருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பட்டங்கள் என்பவை வேலைவாய்ப்புக்காக மட்டும் அல்ல. உங்களது அறிவாற்றலை மேம்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது.

Also Read : ஒரு லிட்டர் பசு கோமியம் 4 ரூபாய்! சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு கொள்முதல்!

உங்களது பட்டம் வழங்கும் விழாவுக்கு இந்திய நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய நரேந்திர மோடி முதன்மை விருந்தினராக வருகை தந்துள்ளார். இது உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. நான் பட்டம் வாங்கும்போது பிரதமரே வந்திருந்தார் என எதிர்கால பிள்ளைச் செல்வங்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம். இத்தகைய பெருமைகளோடு எதிர்காலத்துக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். அறிவாற்றல்தான் அனைத்திலும் வலிமையானது என்பதை உணருங்கள்.” இவ்வாறு அவர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry