மரபுவழி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்யலாம்! முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய ஐகோர்ட்!

0
1121

இந்திய மரபுவழி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மருத்துவ உலகில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மரபு வழி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்வதை ‘Crosspathy’ என அழைக்கிறார்கள்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில் உள்ள ஸ்ரீ செந்தில் பாலாஜி பாலிகிளினிக்கில், வட்டார மருத்துவ அதிகாரி அக்டோபர் 2017ல் திடீர் சோதனை நடத்தினார். அங்கு அலோபதி முறையிலும் மருத்துவம் பார்ப்பதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், மருத்துவர் செந்தில்குமாருக்கு எதிராக 09.10.2017 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் Bachelor of Homoeopathic Medicine and Surgery படித்தவர்.

அவரது மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவம் படித்தவர்கள், தாங்கள் படிக்கும்போது பெற்ற பயிற்சியின் அடிப்படையில் அலோபதி மருத்துவமும் பார்க்கலாம். முழுக்க முழுக்க அலோபதி மருத்துவம் செய்யக் கூடாது என்று கடந்த 19.06.2010-ல் தமிழக சுகாதாரத்துறை பிறப்பித்த சுற்றறிக்கை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அந்த சுற்றறிக்கையில், இந்திய மருத்துவமுறை படித்த மருத்துவர்கள், நவீன மருத்துவதையும் பார்ப்பதில் காவல்துறையினர் தலையிடக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மருத்துவர் செந்தில்குமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், இந்திய மருத்துவ முறைக்கான தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை முறையையும் பயன்படுத்தலாம்.

To read the HC order, click on the link: Crosspathy Allowed in Tamil Nadu – Maras High Court Order.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1970, பிரிவு 17(3) B இன் படி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதியில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள், உரிய கற்றல் மற்றும் பயிற்சியின் அடிப்படையில், அறுவை சிகிச்சை, மகப்பேறியல், மயக்கவியல், ENT, கண் மருத்துவம் போன்ற துறைகளிலும் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சையும் செய்தால் அவர்களை போலி மருத்துவர்கள் எனக்கூறி காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இனிமேல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய பதிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களின் நடைமுறையில் தலையிட வேண்டாம் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry