2022-ல் அதிக வசூல் செய்த படங்கள்! முதல் இடம் பிடித்தது பொன்னியின் செல்வன்!

0
100

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு,  மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள பொன்னியின் செல்வன் வெளியான நாள் முதல் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும் தமிழ் திரையுலகில் நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவரும் வரலாற்றுப் படமாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Also Read : மதுரையில் ஓரம்கட்டப்பட்டும் பி.டி.ஆர்.! தனது நிகழ்ச்சிகளை புறக்கணிக்குமாறு கட்சியினர் மிரட்டப்பட்டுவதாக புலம்பல்!

முதல் மூன்று நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் செய்தது. உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.450 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் முந்தைய  தமிழ்ப் படங்களின் வசூலைப் பொன்னியின் செல்வன் முறியடித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.

கமலின் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 430 கோடி வசூல் செய்திருந்த நிலையில், விக்ரம் திரைப்படத்தின் வசூலைப் பொன்னியின் செல்வன் முந்தியுள்ளது. மேலும் 2022ல் வெளியான தமிழ்ப்  படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பொன்னியின் செல்வன் பிடித்துள்ளது.

Also Read : ஃபேஸ்புக்கில் தொழில்நுட்ப கோளாறு! ஃபாலோயர்களை அதிக அளவில் இழந்த பயனர்கள்!

70 ஆண்டுகளுக்கு மேலாகப் பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் பலர் முயற்சி செய்த நிலையில், பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry