பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களில் கூட இந்தியா உள்ளது! எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து மோடி கடும் விமர்சனம்!

0
40
"East India Company, Indian Mujahideen": PM Modi's Attack On Opposition Front

‘இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவிலும் கூட ‘இண்டியா’ என்ற பெயர் உள்ளதாக, எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார். நாடாளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்க்கட்சியினரைத் “திக்கற்றவர்கள்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜக எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்தது இல்லை. ‘இண்டியா’ என்ற பெயருக்காக அவர்கள் தங்களையே புகழ்ந்து கொள்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ், கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறது. அதனால், ‘இண்டியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகிவிடாது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது.

Also Read : ஜிஎஸ்டி-யின் கீழ் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள்! தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு!

தோல்வி, சோர்வு, நம்பிக்கையின்மை போன்றவற்றால், மோடியை எதிர்ப்பது ஒற்றையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகளாக மட்டுமே இருக்க முடிவு செய்திருப்பதையே அவர்களின் நடத்தை காட்டுகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் பாஜக எளிதில் வெற்றி பெறும்” என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக புதன்கிழமை மணிப்பூரில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நூற்றுக்கணக்கான ஆண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்செல்லும் வீடியோ ஒன்று வெளியாக நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மணிப்பூர் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த வியாழக்கிழமையில் இருந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் ‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும், இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனால் வியாழக்கிழமை தொடங்கி நேற்று வரையிலான மூன்று நாள்களிலும் எந்தவிதமான அலுவல்களும் நடக்கவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியும், எதிர்க்கட்சிகள் அவையை நடத்தவிடவில்லை. இந்தப் பின்னணியில்தான் எதிர்க்கட்சிகள் மீதான இந்த விமர்சனத்தை பிரதமர் மோடி முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : பொது சிவில் சட்டத்தால் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அரசின் முயற்சி பற்றிய விரிவான பார்வை! #UniformCivilCode

இதனிடையே, 4-வது நாளாக மக்களவை இன்று கூடியதும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதிகாத்து இருக்கையில் அமருமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். அவையில் தொடர்ந்து கூச்சலிடுவதால் எந்தத் தீர்வும் கிடைக்காது என்றும், முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் தங்களது கோரிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கப் போவது இல்லை என்பதால், அமளிகளுக்கு இடையில் அலுவல்களை நடத்த அரசு முடிவெடுத்தது. இதனிடையே மக்களவையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry