கோவை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பேசுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக அரசு குறித்து அவர் கடுமையாக விமர்சிப்பதாக அந்த ஆடியோ உள்ளது. அதில், கடந்த பொங்கல் பண்டிகையின்போது அரசு கொடுத்த 21 வகையான பொருட்களின் தொகுப்பை மக்கள் விரும்பவில்லை, அதிமுக ஆட்சியில் கொடுத்தது போல பெண்கள் பணத்தை எதிர்பார்த்தார்கள்.
அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா மட்டுமே முடிவு எடுத்தனர். வேறு யாரும் நுழைய முடியாது. இதை எல்லாம் செய்யாவிட்டால் மிகவும் சிரமம். ஆட்சிக்கு 10 கதவுகள் இருக்கக் கூடாது. அரசியலில் இவர் ஒருவர் மட்டுமே முடிவு எடுப்பது போல இருக்க வேண்டும். அண்ணாநகர் கார்த்தி வீட்டில் தினமும் காலை 200-300 பேர் நிற்பார்கள். அவர் மீட்டிங்கில் இருப்பதாக சொல்வார்கள்.
ஆனால் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார். காலை 8.30 மணிக்கு தான் எழுந்திப்பார். 10.30 மணி வரை உடற்பயிற்சி செய்வார். தொழில் நிமித்தம், டெண்டர் விசயம் தொடர்பாக வந்திருப்பவர்கள் மட்டும் அந்த நேரத்தில் பேச அனுமதிக்கப்படுவார்கள். அவர் மாடியில் இருந்து கீழே வருவதற்கே 11.30 மணி ஆகிவிடும்.
அவர் ஒரு பவர் சென்டர். அன்பில் மகேஷ் எங்கே தங்கியிருப்பார் என்று திருச்சியில் இருப்பவர்களுக்கே தெரியாதாம். நேருவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், இவரை அப்படிப் பார்க்க முடியாது என சொல்கிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
புத்திசாலித்தனமான அரசாக இருந்திருந்தால், கோவைக்கு ஆண் மேயரை கொண்டு வந்திருக்க வேண்டும். கட்சியை அப்படித்தான் வளர்க்க முடியும். கீழே உள்ள 100 பேரை வைத்து கட்சியை வளர்க்க முடியாது. நேரு நுனிப்புல் மட்டும் மேய்வார். அப்படியே எல்லா தோட்டத்திலும் மேய்ந்து கொண்டே செல்வார். எதையும் முறையாக செய்வதில்லை.
கோவைக்கு பெண் மேயராக வந்து கட்சியில் என்ன சாதிக்க முடியும். ஒரு பெண் மேயர் 10 அதிமுக எம்எல்ஏகளை எப்படி எதிர்கொள்ள முடியும். அவர்களின் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும் பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது.” என்று கூறியுள்ளார்.
இது எப்போது நடந்த உரையாடல், எதிர்முனையில் பேசுபவர் யார் என்பது குறித்த விவரம் தெரிவியவில்லை. பொதுவாக கால் செய்யும் நபரது செல்போனில் ரெக்கார்டிங் வசதி இருந்தாலும், WIFI ஆனில் இருக்கும்போது,(WIFI CALLING) அழைப்பவரின் குரல் மட்டுமே பதிவாகும். எதிர் முனையில் பேசுபவரின் குரல் பதிவாகாது என்பது குறிப்படத்தக்கது.
Also Read : பிஜேபியை மிரட்டும் எல் நினோ! தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காலநிலை மாற்றம்!
இந்த ஆடியோ குறித்து விகடன் தரப்பில், கோவை திமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான நா.கார்த்திக்கை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அப்போது, “அது தவறானது. நான் அப்படியெல்லாம் யாரிடமும் பேசியதில்லை. இது என் கவனத்துக்கு வரவில்லை. அந்த ஆடியோ இருந்தால் அனுப்புங்கள்.” என்று கூறியிருக்கிறார். விகடன் தரப்பிலிருந்து ஆடியோ அனுப்பியவுடன் வாட்ஸப் காலில் பேசிய கார்த்தி, “இதற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. இதை அப்படியே விட்டுவிடுங்கள்.
அந்த ஆடியோவில் எதிரில் யாரின் குரலும் கேட்கவில்லை. வேண்டாதாவர்கள் யாரோ திட்டமிட்டு இப்படி ஒரு போலியான ஆடியோவை உருவாக்கியுள்ளனர். யார் மாதிரி வேண்டுமானாலும் பேசும் மிமிக்ரி கலைஞர்கள் உள்ளனர். தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. ஆய்வுக்கு உட்படுத்தாமல் அதை எப்படி என் குரல் என்று சொல்ல முடியும்?” என்று கேட்டுள்ளார்.
Also Read : ஜிஎஸ்டி-யின் கீழ் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள்! தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு!
With Input Vikatan
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry