பிஜேபியை மிரட்டும் எல் நினோ! தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காலநிலை மாற்றம்!

0
83
Is the Modi Government Facing Heavy Weather? 

இந்தியாவின் 80 சதவீதம் பகுதிகள் தென்மேற்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது. இந்த ஆண்டு, எல்-நினோ நிகழ்வால் இந்தியாவில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யும் என கணிக்கப்படுகிறது.

எல்-நினோ என்பது, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பமயமாதலுடன் தொடர்புடைய காலநிலை மாற்றமாகும். எல்-நினோ காலத்தில் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் கடுமையான வறட்சி ஏற்படும். குறைந்த நேரத்தில் அதீத மழை, திடீர் புயல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். எல்-நினோ நிகழ்வு சராசரியாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்று வானிலை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Also Read : B.Sc., Maths பாடப்பிரிவை தவிர்க்கும் மாணவர்கள்! பல கல்லூரிகளில் இளங்கலை கணிதப்பிரிவுக்கு மூடுவிழா!

எல்-நினோ நிகழ்வால் உலக நாடுகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான தாக்கத்தை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வானிலை ஆராய்ச்சி அமைப்பு (US National Oceanic and Atmospheric Administration – NOAA) எச்சரித்துள்ளது. எல்-நினோ தாக்கம் இடத்துக்கு இடம் வேறுபடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை எல்-நினோ பாதிப்பு ஏற்பட 70 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல்-நினோவின் தாக்கம் ஜூலை 2023 முதல் இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பமயமாதல் விளைவால் உண்டான எல்-நினோவினால் 2015-2016 ஆண்டுகளில் 6 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் எத்தியோப்பியா, எரித்திரியா , சோமாலியா மற்றும் ஜிபூட்டி கென்யா, சூடான், உகாண்டா போன்ற நாடுகள் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியது. அப்போது, கடுமையான வறட்சி மற்றும் வெள்ளத்தால் தீவிர உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது.

Also Read : மீண்டும் அதிகரிக்கப்போகும் மின் கட்டணம்! இந்த முறை 25% வரை உயர்த்தப்போவது மத்திய அரசு!

குறிப்பாக பூமியின் வெப்பநிலை உயர்வு காரணமாக கடல் மட்டம் உயர்ந்தன. இவை பல்வேறு நோய் பரவலுக்கு காரணமாகின. மேலும் இதனால் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுவாச நோய்கள் உட்பட பலவிதமான உடல்நலப் பிரச்சினைகள் உருவாகின. அத்துடன், எல்-நினோ காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன் குனியா போன்ற வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

காலநிலை சவால்களுக்கு இந்தியாவில் ஆளும் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்தே அதன் தேர்தல் முடிவுகள் அமைகின்றன. அடுத்த ஓராண்டுக்குள் இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களும், மே 2024-ல் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளன. இதில் காலநிலை மாற்றமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எல் நினோ தாக்கம் அதிகமானால், ஆசியாவிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பொருளாதார நாடாக இந்தியா இருக்கக்கூடும். எல் நினோ 0.4 சதவீத வளர்ச்சியைக் குறைக்கலாம் மற்றும் 2024 நிதியாண்டுக்கான அதன் பணவீக்கத்தில் 0.3 சதவீத புள்ளிகளைச் சேர்க்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read : சென்னையில் இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்! பேட்டர்சன் கேன்சர் சென்டர் ஏற்பாடு!

எல் நினோ விவசாயத்திலும் கடும் தாக்கத்தை உருவாக்கும். 2001 முதல் 2020 வரையில், இந்தியா 6 முறை எல்-நினோ நிகழ்வை எதிர்கொண்டது. இவற்றில், நான்கு ஆண்டுகள் வறட்சிக்கு வழிவகுத்தது. இதனால் கோடையில் பயிர் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. இதில் தமிழகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளும் எல்-நினோ வருவதை 90% உறுதி செய்துள்ள நிலையில், இந்த நிகழ்வுகள் வரும்போது மழைப்பொழிவு குறையலாம். நமது பூமியின் சராசரி வெப்ப நிலை இப்போது 1.2 டிகிரி சென்றுள்ளது. இது 2030-ம் ஆண்டில் 1.5 டிகிரி செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. பூமி வெப்பநிலை அதிகரிப்பு என்பது தற்போது தீவிர பேசுபொருளாகி இருக்கிறது. உலக நாடுகள் வெறும் பேச்சளவில் மட்டும் காலநிலை மாற்றத்துக்கு தீர்வுகளை வைக்காமல் செயல்படவும் வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry