எகிறியது சொத்து வரி! 150% வரை அதிகரிப்பு! மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருப்பதாக எடப்பாடி விமர்சனம்!

0
214

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகளை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. 150% வரை வரிகள் அதிகரித்திருபபதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான், இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 600 முதல் 1200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், 1801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 150 சதவீதமும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு, 2011-ல் சென்னையோடு இணைந்த பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளில் 600 சதுர அடிக்குக் குறைவான குடியிருப்புகளின் கட்டிடங்களுக்கு 25 சதவீதமும், 600 முதல் 1200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1801 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை பிரதானப் பகுதிகளில் உள்ள வணிகப் பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 150 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள், பிற மாநகராட்சிகளின் உள்ள வணிகப் பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 600 சதுர அடிக்கு கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1800 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு, தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry