22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க தமிழிசை உத்தரவு! ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு தப்புமா?

0
22

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு வரும் 22-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசு தப்புமா என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அமைச்சர்களாக பதவி வகித்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் எம்.எல்..-க்களாக இருந்த தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் முதலமைச்சரை நேரடியாக குற்றஞ்சாட்டிவிட்டு பதவி விலகியுள்ளனர். இதனால், பெரும்பான்மைக்குத் தேவையான 15 சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமல் காங்கிரஸ் அரசு ஊசலாட்டத்துடன் உள்ளது.  பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தலைமையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 14  எம்.எல்..-க்கள் கையெழுத்திட்ட கடிதம் ஆளுநரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.   

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி செவ்வாய்க்கிழமை இரவு திடீரென விடுவிக்கப்பட்டார். இவர் துணை நிலை ஆளுநராக நீடித்திருந்தால், அது, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே இருந்திருக்கும். இதுபற்றி வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே எழுதியிருந்தோம். இந்தச் சூழலில், பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை 9 மணிக்கு பொறுப்பேற்றுக்கொண்டார்பதவியேற்பு மற்றும் ரகசிய பாதுகாப்பு உறுதிமொழியை அவர் தமிழில் எடுத்துக்கொண்டார்

Also Read ஹெல்மெட் விவகாரத்தில் பாஜக மீது மக்கள் கடும் அதிருப்தி! தீட்டிய மரத்தில் கூர்பாயும் கிரண்பேடி!

Also Readஅரசு அலுவலகங்களில் ஹெல்மெட் பதிவேடு! கிரண்பேடிக்கு எதிராக கொந்தளிக்கும் ஊழியர்கள்!

காங்கிரஸ் எம்.எல்..க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகிறது. ஆனால், ஆளும்கடசி மற்றும் எதிர்கட்சிகளுக்கு தலா 14 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்தநிலையில், வரும் 22-ம் தேதி  மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று நாராயணசாமி அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பது நாராயணசாமிக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்கள், மத்திய பிரதேசம், கர்நாடகம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில்ஆபரேஷன் தாமரைதிட்டத்தை தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களுக்குள் செயல்படுத்தி பாஜக வெற்றி பெற்றது. புதுவையில் காங்கிரஸ் ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் இந்தத் திட்டத்தை பாஜக செயல்படுத்துவது காங்கிரஸ் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. பிரதமர் மோடி வரும் 25-ஆம் தேதி  புதுச்சேரிக்கு வருவதற்குள், நாராயணசாமி ஆட்சி கலைந்துவிடும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன.

ஆனால், எதிர்க்கட்சியினர் அப்படித்தான் பேசுவார்கள், தனது ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது, அரசின் விதிகளுக்குட்பட்டு காங்கிரஸ் செயல்படும் என மிகுந்த நம்பிக்கையுடன் முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வருகிறார். இதற்கிடையே, மேலும் ஒரு சில காங்கிரஸ் எம்.எல்..க்கள் ராஜினாமா செய்யக்கூடும்  என்ற தகவலும் உள்ளது. அவ்வாறு நடந்தாலோ அல்லது சட்டப்பேரவைக்கு வருவதை அவர்கள் தவிர்த்தாலோ, அரசு கவிழ வாய்ப்புள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து நாராயணசாமி எம்.எல்..க்களை இழுக்கவும் வாய்ப்புள்ளது. அதாவது பெரும்பான்மையை நிரூபிக்கும் தினத்தில், எதிர்க்கட்சி அதிருப்தி எம்.எம்.எல்.க்கள் அவைக்கு வருவதைத் தவிர்த்தால், ஆட்சி தப்பிவிடும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry