தேசிய விருது வென்ற புதுச்சேரி போலீஸ் எஸ்.பி.! உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என பெருமிதம்!

0
16

புதுச்சேரி போலீஸ் எஸ்.பி. டாக்டர். ரஞ்சனா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கான அவரது முயற்சியை அங்கீகரித்து இந்த விருதை வழங்கப்பட்டுள்ளது

தனி நபர், தொழில் முனைவோர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரில், சிறந்து விளங்கும் பெண்மணிகளை கவுரவிக்கும் விதமாகவும், மற்ற பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விதமாகவும், மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெயரில் ஶ்ரீ சக்தி சம்மான் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நடப்பாண்டுக்கான விருது வழங்கும் விழா மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கோவிட்-19 தொற்று காரணமாக, காணொளி வாயிலாக இதற்கான விழா நடைபெற்றது. புதுச்சேரி காவல்துறையில் இருந்து, பெண் அதிகாரிகளான எஸ்.பி. டாக்டர் ரஞ்சனா சிங், அகன்ஷா யாதவ், நிஹாரிகா பட் ஆகிய மூன்றுபேர் விருது பெற்றுள்ளனர்.

இதுகுறித்து வேல்ஸ் மீடியாவிடம் கருத்து தெரிவித்த டாக்டர் ரஞ்சனா சிங், பெண்கள் மேம்பாட்டுக்கான தனது முன்னெடுப்புகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

தேசிய அளவிலான இந்த விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிகிறது. இது மிக முக்கிய தருணம். மூன்று அதிகாரிகள் இந்த விருதை பெற்றிருப்பதன் மூலம், புதுச்சேரி காவல்துறைக்கு பெருமை கிடைத்திருக்கிறது என்று டாக்டர் ரஞ்சனா சிங் தெரிவித்துள்ளார்.

விருது பெற்ற டாக்டர் ரஞ்சனா சிங், அகன்ஷா யாதவ், நிஹாரிகா பட்  ஆகிய மூன்று அதிகாரிகளையும் பாராட்டுவதில் வேல்ஸ் மீடியா பெருமை கொள்கிறது. காவல்துறையில் அவர்கள் மேலும் பல சாதனைகள் படைக்க வேல்ஸ் மீடியா வாழ்த்துகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry