ஒலிம்பிக் அரையிறுதியில் பி.வி.சிந்து! ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்! இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்?

0
19

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

பி.வி.சிந்து 2016ஆம் ஆண்டு, ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இதனால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. டோக்கியோவில் இதுவரை வெற்றிநடை போட்டு வரும் சிந்து, காலிறுதிப் போட்டியில், முன்னாள்நம்பர் ஒன்வீராங்கனையும், தற்போது 5-வது இடம் வகிப்பவருமான ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் மோதினார்.

இந்த ஆட்டம் 56 நிமிடங்கள் நடைபெற்றது. முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய சிந்துவுக்கு, 2வது செட்டில், 3-3 என்று யாமகுச்சி டஃப் கொடுத்தார். ஆனால் யாமகுச்சி தவறாக வெளியே ஒரு ஷாட்டை அடிக்க, சிந்து 5-3 என்று முன்னிலை வகித்தார். அடுத்த 5 புள்ளிகளை சிந்து அபாரமாக பெற்ற நிலையில், யாமகுச்சியால் 2ஐத்தான் வெல்ல முடிந்தது. இதனால் 10-5 என்று சிந்து முன்னிலை பெற்றார். அடுத்த 5 கேமில் சிந்து வெல்ல, யாமகுச்சி 3-ல் வென்றார், இதனையடுத்து ஆட்டம் 14-8 என்று இருந்தது.

இந்த நிலையில் திடீர் அவதாரம் எடுத்த யாமகுச்சி பிரமாதமாக ஆடி சவால் அளித்தார். சிந்து ஒரு புள்ளியை மட்டும் பெற, யாமகுச்சி 6 புள்ளிகளை வெல்ல, ஆட்டம் 15-14 என்று நிலைக்கு வந்தது. இதன் பின்னரும் யாமகுச்சியே ஆதிக்கம் செலுத்தினார். 19-18 என்ற நிலையில், ஒரு ஸ்மாஷ் ஷாட் ஆடி, சிந்து 19-20 என்று ஆனார். மீண்டும் ஒரு பிரமாதமான டவுன் த லைன் ஸ்மாஷ் ஆட 20-20 என்று சமன் ஆனது. பிறகு சிந்து 2 கேம் பாயிண்டுகளை சேவ் செய்து நின்றார். பிறகு 21-20 என்று மேட்ச் பாயிண்டுக்கு வந்த சிந்து, 22-20 என்று ஜெயித்துக் காட்டினார்.

21-13, 22-20 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்திய பிவி சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சீன தைபே வீராங்கனை Tai Tzu-ying-ஐ சிந்து எதிர்கொள்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry