ஏழைகளுக்கான அரசை காங்கிரஸால் தான் தரமுடியும்! மோடி அரசு மீது ராகுல் கடும் விமர்சனம்!

0
131

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 50 ரூபாய் உயர்ந்து சென்னையில் ரூ.1,015.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், எழை மக்களுக்கான நல்ல அரசை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தர முடியும் என அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த 2014-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 410 ரூபாய் தான்.

அப்போது மானியமாக 827 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது 2022 பாஜக ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.999க்கு விற்கப்படுகிறது. அதில் மானியம் எதுவும் இல்லை. அப்போது இரு சிலிண்டர்கள் வாங்கும் விலையில் தான் இப்போது ஒரு சிலிண்டரே வாங்க முடியும். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கான ஆட்சியை காங்கிரஸால் மட்டுமே தரமுடியும். அதுதான் நம் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை”என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry