இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாக ராகுல்காந்தி புகார்! டிரைவர் மீதான தாக்குதலே விபத்துக்குக் காரணம் என அமைச்சர் விளக்கம்!

0
11

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை என்று கூறியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி, சிதாபூரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  பதற்றமாக உள்ள லக்கிம்பூர் கேரி மற்றும் சிதாபூர் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ”நாட்டின் விவசாயிகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் கொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால்தான் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது.

முன்பு ஜனநாயக ஆட்சி நடைபெற்று வந்த இந்தியாவில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அரசியல்வாதிகள் உத்தரபிரதேசத்திற்கு செல்ல முடியவில்லை. நாங்கள் உத்தரபிரதேசத்திற்கு செல்லமுடியாது என்று நேற்று முதல் எங்களிடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. லக்னோ சென்ற மோடி லகிம்பூர் செல்லாதது ஏன்என்னையும் என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நியாயம்தான் கேட்கிறோம்இரண்டு முதல் மந்திரிகளுடன் நான் இன்று லகிம்பூர் செல்ல உள்ளேன். அங்கிருக்கும் சூழலை புரிந்து கொள்ளவும் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கவும்  லகிம்பூர் செல்கிறோம்என்றார்

பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு, லக்கிம்பூர் செல்வதற்காக ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கே.சி. வேணுகோபால், சச்சின் பைலட் ஆகியோர் டெல்லி விமான நிலையம் சென்றார்கள். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ராகுல் காந்தியை சேர்த்து 4 பேர் சீதாபூர் செல்ல உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளித்தததால், அவர்கள் லக்னோ செல்லும் விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர்

இதனிடையே, லக்கிம்பூர் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, “கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் டிரைவர் படுகாயமடைந்தார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியது. அங்கிருந்தவர்கள் மீது மோதிய காரில் எனது மகன் பயணிக்கவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்என்றார்.

முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி அரசு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் கார்களில் சென்று கொண்டிருந்தனர். திகுனியா என்ற பகுதியில் குவிந்திருந்த விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது விவசாயிகள் மீது பா...வினர் சென்ற கார் மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து வன்முறை மூண்டது. இதில் மொத்தம் 9 பேர் பலியாகினர். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா டெல்லியில போலீஸிடம் சரணடையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த விவசாயிகளின் உடலில் குண்டு காயங்கள் இல்லாவிட்டால், 304A பிரிவில் மட்டுமே வழக்கு நிற்கும். இந்தப் பிரிவுக்கு காவல் நிலையத்திலேயே பிணை பெற்றுவிட முடியும்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry