விளையாட்டுல மதம், குழைந்தங்க மனசுல விஷம்..! எந்தக் கட்சியை வச்சி செய்துள்ளார் ஐஸ்வர்யா? மிரட்டும் ரஜினியின் லால் சலாம் டீசர்! Rajini’s ‘Lal Salaam’ teaser!

0
85
‘Lal Salaam’ teaser: Rajinikanth promises a powerful cameo appearance

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. தீபாவளியையொட்டி இப்படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

விக்ராந்த், விஷ்ணு விஷால் தலைமையிலான இரு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுத்து பெரும் கலவரம் வெடிப்பதுடன் டீசர் தொடங்குகிறது. இதனால் சில மரணங்கள் நிகழ்கின்றன. இதனையடுத்து ரஜினியின் மாஸான என்ட்ரி கொடுக்கிறார். “விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க”, “குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க” என்று ரஜினி பேசும் வசனம் கவனம் ஈர்க்கிறது.

டீசரில், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், செந்தில் ஆகியோரும் வருகின்றனர். முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். 2015ஆம் ஆண்டுக்கு பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் படம் இது. கடந்த ஆகஸ்டு மாதம் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

தமிழ் சினிமா மட்டுமன்றி, இந்திய சினிமா அளவிலேயே தீவிரவாதிகள் என்றால் அவர்களை இஸ்லாமியர்களாக காண்பிப்பர். இந்த வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதை உடைத்தெறிக்கும் விதமாக ரஜினி தற்போது லால் சலாம் படத்தில் நடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு லால் சலாம் வெளியாவுள்ளது. ஏற்கனவே பொங்கல் ரேஸில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் இருக்கின்றன. லால் சலாம் பொங்கல் பண்டிகையின்போது வெளியானாலும் முன்னணி படமாக அமையுமா என்பது கேள்வியாக இருந்தது. ஆனால், நாங்களும் ரேஸில் இருக்கிறோம் ஸ்கிரீன்களை ஒதுக்கி வையுங்கள் என்று சொல்வதைப் போல் டீசர் அமைந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry