சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை இழக்கப்போகும் ரஜினிகாந்த்! கோடிகளில் புரள ரசிகர்களை பகடைக் காயாக பயன்படுத்தி வரும் அவலம்!

0
5

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் இல்லை என அறிவித்துள்ள ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தை, ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக மாற்றியுள்ளார்.

வெள்ளித்திரை சூப்பர் ஸ்டாரான ரஜினி, அரசியலைப் பொறுத்தவரை ரசிகர்களை ஏமாற்றும் வில்லனாகவே இருந்து வந்துள்ளார். நான்கு ஆண்டுகளாக அவர் நடத்திய அரசியல் நாடகத்தை நம்பி ரசிகர்கள் ஏமாந்தனர். 2017 டிசம்பர் 31-ல் அரசியலுக்கு வருவதாகக் கூறினார். 2018 மார்ச் 5-ல் ஆன்மிக அரசியலுக்கான ஒரு விளக்கத்தை எடுத்து வைத்தார். 2020 மார்ச் 12-ல் தான் அரசியலுக்கு வர அலை வர வேண்டும், போர் வர வேண்டும் என பின்வாங்கினார். 2020 டிசம்பர் 3-ந் தேதியன்று ஜனவரியில் கட்சி தொடக்கம், 31-ல் பெயர் அறிவிப்பு என்றார். ஆனால், டிசம்பர் 29-ல் கட்சி தொடங்கவில்லை என அறிவித்தார்.

தான் என்ன சொன்னாலும், செய்தாலும் ரசிகர்கள் அப்படியே ஏற்பார்கள் என்ற நினைப்பில் ரஜினி நடத்திய நாடகம்தான் இது. இதற்கு ஏற்றார்போல, தலைவர் அரசியலுக்கு வரப்போகிறார் என நம்பி, மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் கைக்காசை கொட்டி பேனர், கட் அவுட் என அதகளப்படுத்தினார்கள். ஆனால், கொரோனாவையும், உடல் நிலையையும் காரணம் காட்டி  அரசியலுக்கு வரவில்லை என அறிவித்தார். இதனால் மனமுடைந்த ரசிகர்கள் பலர், மன்ற பொறுப்புகளில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்தனர். ரஜினியின் இந்த முடிவுக்குப் பின்னணியில் திமுக இருப்பதாக அப்போது பரவலாக பேசப்பட்டது. ஆனால், ரஜினியின் உடல் நலன்தான் முக்கியம் என ரசிகர்கள் பலர் அவரது முடிவை ஏற்றனர். 

ஆனால், உடல்நிலையை காரணம்காட்டி அரசியல் வருகையை தவிர்த்த ரஜினிகாந்த், கலாநிதி மாறன் தயாரிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதன்மூலம், தான் சூப்பர் ஸ்டாராக நீடிக்க, ரசிகர்களை அவர் பகடைக் காய்களாக பயன்படுத்துவது அம்பலமானது. ரஜினியால் பெரும் நட்டத்தையும், ஏமாற்றத்தையும் சந்தித்த ரசிகர்கள், அவர் மீதான ஈர்ப்பை, பாசத்தை, அன்பை வெகுவாகக் குறைந்துக்கொண்டனர்.

இதை உணர்ந்த ரஜினி, மன்ற நிர்வாகிகளை அழைத்து சென்னையில் கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் முடிவில், வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் இல்லை, ரஜினி மக்கள் மன்றம், இனி, ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மன்ற தலைவரும், ரஜினிக்கு மிக நெருக்கமானவருமாக அறியப்பட்ட கே.வி.எஸ். சீனிவாசன், மன்றத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரைப்போல இன்னும் பலரும் விலகத் தயாராக இருக்கின்றனர். இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாதா நிர்வாகி ஒருவர் கூறும்போது, எங்களுக்கு அரசியல் ஆர்வத்தை, ஆசையை தூண்டியது அவர்தான். ஆனால், அவரது அரசியல் சடுகுடு ஆட்டத்தால், மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, ரசிகர்களிடமும் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது. ரசிகர்கள் அவரைவிட்டு விலகிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு, கல்பாத்தி அகோரம் உள்ளிட்ட சிலரது தயாரிப்பில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். இந்தப்படங்களை ஓட வைக்க, கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்ய நாங்கள் தேவைப்படுகிறோம். இதற்காகத்தான் நிர்வாகிகளை கூட்டி, ரசிகர் நற்பணி மன்றம் என பெயர் மாற்றம் செய்துள்ளார். இனிமேலும் ஏமாற நாங்கள் தயாராக இல்லை.

அடுத்து வரப்போகும் படங்கள் தோல்வி அடையும்போது, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அவர் இழக்கப்போவது உறுதி. பொருளாதார ரீதியாக நாங்கள் பெரும் கஷ்டத்தில் இருக்கும்போது, எங்களைவைத்து இனிமேலும் கோடிகளில் புரளாலாம் என, அவரோ அவரது குடும்பத்தினரோ பகல் கனவு கண்டால் அது பலிக்காது. மக்கள் மன்றத்தை, ரசிகர் மன்றமாக மாற்றியிருப்பதன் மூலம், அவர் இனி மக்கள் நலப் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அவரது அடுத்தடுத்த படங்களை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க ரசிகர்கள் தேவை. எனவேதான் தற்போது நிர்வாகிகளை அழைத்து பேசியுள்ளார்” என்று விரிவாகத் தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry