ரஜினி 169 டைட்டில் வெளியீடு! ‘ஜெயிலர்’ – ட்ரெண்டிங்கில் No.1!

0
189

ரஜினியின் 169வது படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதை அடுத்து படத்தின் டைட்டிலை ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

அண்ணாத்த படத்துக்கு பிறகு ரஜினியின் 169வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்க இருப்பதாக படத்தின் முதல் அப்டேட்டின் போதே அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட பிற விவரங்களை தயாரிப்பு நிர்வாகம் தரப்பில் எந்த அப்டேட்டும் கொடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ரஜினி 169 படத்தின் டைட்டிலை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி ரத்தம் சொட்ட தொங்க விடப்பட்டிருக்கும் கத்தியுடன் ‘ஜெயிலர்’ என தலைப்பிடப்பட்டிருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

டைட்டில் வெளியான சில நொடிகளிலேயே Jailer என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு வருவதால் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே ஜெய்லர் படத்தில் கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரமான சிவராஜ்குமார், ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என அண்மையில் தகவல்கள் வெளியானது. படத்தின் டைட்டிலை அடுத்து யாரெல்லாம் ஜெய்லரில் இணைந்திருக்கிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry