காமப் பாடம் எடுத்த அறிவியல் ஆசிரியர்! போலீஸ் கைது செய்ததால் சஸ்பெண்ட்! PSBB அளவுக்கு கண்டுகொள்ளாத ஊடகங்கள்!

0
108

முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதால் கைதான பள்ளி ஆசிரியர் பள்ளி ஆசிரியர் ஹபீப் முகம்மதை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஹபீப் முகம்மது மாணவிகளை மிரட்டிப் பணிய வைக்க முயன்ற ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

முதுகுளத்தூர் அரசு உதவி பெறும் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் ஹபீப். 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் அவர் நடத்தியுள்ளார். அப்போது மாணவிகளின் மொபைல் எண்களை பதிவு செய்து வைத்துக்கொண்டு தொடர்ந்து அவர் பேசி வந்துள்ளார். வீட்டில் பெற்றோர் இல்லாத நேரங்களில் மாணவிகளை தொடர்பு கொண்டு இவர் சபலத்துடன் பேசுவாராம். உன் வீட்டிற்கு தெரியாமல் புத்தகங்களுடன் எனது வீட்டிற்கு வா, இல்லை என்றால் நான் இந்த ஆண்டு தேர்ச்சி அடையவிட மாட்டேன் எனவும், சில மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்டு இதற்கு முன் அந்த மாணவிகள் தனது வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார். நாம் பேசியது வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் நமக்குள் மட்டுமே இருக்கட்டும் எனவும் ஹபீப் பேசியுள்ளார்.

9- வகுப்பு மாணவி ஒருவரிடம் பேசும் ஆசிரியர் ஹபீப் முகம்மது, ‘‘பெண்கள் ஆசையை அடக்கி வைக்கக்கூடாது. உங்களுக்கு ஏதாச்சும் தோணுச்சுனா, என்னிடம் சொல்லுங்க. ஆண்களுக்கு ஆசை வந்தால் வெளிப்படுத்தி விடுவோம். பெண்களால் அது முடியாது. அப்படி உனக்கு ஆசை இருந்தால் என்னிடம் சொல், புத்தகத்தை எடுத்துக்கொண்டு எனது வீட்டிற்கு வரமுடியுமா’’ என்று பேசுகிறார்.

ஹபீப், பள்ளி மாணவிகளுடன் ஆபசமாக பேசிய ஆடியோ பதிவு வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வைரலானது. ஆடியோவில் உள்ளது ஹபீப் குரல்தான் என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாணவிகளிடம் ஆபசமாக பேசி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஹபீப்பை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் ஏடிஎஸ்பி தலைமையில், முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், டிஎஸ்பி ராகவேந்திரா ரவி, இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் 36 வயதான ஹபீபை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். ஒரு மாணவி மட்டுமே புகார் அளித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். ஹபீப் முகம்மதை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பத்மா சேஷாத்ரி பள்ளி அளவுக்கு இநத விவகாரத்தை பெரு ஊடகங்கள் கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry