திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது உறவினர் சிலதினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இறந்தவர் படத்தை வைத்து குடும்பத்தினர் வழிபடும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.
உணவு படையலிடுவதற்காக ஆரணி பழைய பஸ் நிலையத்தை அடுத்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் சாப்பாடு ஆர்டர் கொடுத்துள்ளனர். அதன்படி ஓட்டல் நிர்வாகத்தினர் அந்த வீட்டுக்கு உணவை டோர் டெலிவரி செய்துள்ளனர். உணவு படையலிடப்பட்ட பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு பரிமாறப்பட்டு அனைவரும் சாப்பிட்டனர்.
Also Read : அரசுப் பள்ளி மாணவர்கள் 35% பேர் மட்டுமே தேர்ச்சி! 6 மாவட்டங்களில் தேர்வெழுதிய அனைவரும் பாஸ்!
அதன்பின்னர் மீதமான உணவுகளை வேறு பாத்திரத்திற்கு மாற்றியபோது, ஓட்டலில் வழங்கிய பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்ததை கண்டு முரளியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஓட்டல் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உணவை பார்வையிட ஓட்டல் நிர்வாகத்தினர் வரவில்லை.
எலியின் தலையை சேர்த்து செய்த பீட்ரூட் பொரியல். ஆரணியில் பிரபல சைவ ஹோட்டல் மீது பகீர் குற்றச்சாட்டு. #TNNews #velsmedia #Arani #hotel pic.twitter.com/9F6zg2WHkb
— VELS MEDIA (@VelsMedia) September 12, 2022
இதனால் ஆத்திரம் அடைந்த முரளி தரப்பினர் அந்த பகுதியை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் கு.வினாயகம் தலைமையில் எலி தலை கிடந்த பொரியலுடன் சென்று ஓட்டலை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஓட்டலின் வெளியே சாலையில் நின்று தர்ணாவில் ஈடுப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி நகர போலீசார் தர்ணாவில் ஈடுப்பட்ட நபர்களை அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry