4-வது நாளாக போர்! நினைத்ததை சாதிக்கமுடியாமல் ரஷ்யா தவிப்பு! முக்கிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி!

0
235

ரஷ்யா நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆனால், ரஷ்ய விமானங்களை உக்ரைன் எளிமையாக வீழ்த்துகிறது.

உக்ரைனில் போர் கடுமையாக நடந்து வரும் நிலையில், நேற்றிரவு உக்ரைனின் எரிவாயுக் குழாய்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்கியது. இதனால், அங்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கீவ் நகருக்கு அருகில் உள்ள வாசில்கிவ் நகரில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையத்தையும் ரஷ்யப் படைகள் தாக்கியுள்ளன. ரஷ்ய வீரர்கள் 3500 பேரை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Ukrainian President Volodymyr Zelensky (Photo by Getty Images)

உக்ரைனின் வடகிழக்கு பகுதியான கார்கிவ் நகரை ரஷ்ய படைகள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதை உக்ரைன் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. கார்கிவ் நகரில் பல முக்கியமான மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அங்கு தமிழக மாணவர்கள் உள்பட ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் சிக்கி இருப்பவர்களை விமானம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது.

உக்ரைனுக்கு 350 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை அனுப்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவ உதவி அளிக்க முன்வந்துள்ளன. போலந்து நாடு உக்ரைனில் இருந்து வந்துள்ள 1 லட்சம் பேருக்கு தஞ்சம் அளித்துள்ளது. ஹங்கேரி, ருமேனியா நாடுகள் இதுவரை 50,000 உக்ரேனியர்களுக்கு தஞ்சம் கொடுத்துள்ளது. சர்வதேச பணப் பரிவர்த்தனையில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யா சைபர் தாக்குதலும் நடத்துவதால் உக்ரைனில் இணைய சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு உதவுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க்கிடம், உக்ரைன் துணை பிரதமர் கோரிக்கை விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்ற எலான் மஸ்க், பத்தே மணி நேரத்தில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை உக்ரைனுக்கு வழங்கியுள்ளார்.

தலைவகர் கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். உக்ரைன் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ரஷிய ராணுவத்தினருக்கு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

கீவ் நகரில் உள்ள அணையை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. குடியிருப்புகள் மீதும் ரஷ்யா ஏவுகணைகளை வீசுகிறது. தலைநகர் கீவ்வுக்குள் புகுந்துள்ள ரஷிய ராணுவ வீரர்களுடன் உக்ரைன் வீரர்கள் தெருக்களில் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளையில் தலை நகர் கீவ் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

Ukrainian servicemen (Photo by Sega VOLSKII / AFP) (Photo by SEGA VOLSKII/AFP via Getty Images)

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அதிகாரி ஒருவர் கூறும்போது, உக்ரைனுக்குள் தற்போது 50 சதவீத ரஷிய ராணுவத்தினர் படையெடுத்துள்ளனர். ஆனால் அவர்களின் படையெடுப்பு செயல்பாடு மெதுவாக இருக்கிறது. ஏனென்றால் உக்ரைன் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

Also Read: உக்ரைனில் ரஷ்யா உக்கிரம்! போருக்கான உண்மைக் காரணம்! ரஷ்யாவை அச்சுறுத்தும் கடல் வணிகம்!

இந்நிலையில், ரஷ்யா நினைத்தபடி உக்ரனை சுலபமாக கையாள முடியவில்லை என்பதையே களநிலவரம் காட்டுகிறது. சர்வ சாதாரணமாக உக்ரைனை நசுக்கிவிடலாம் என்ற ரஷ்யாவின் கணக்கு பொய்த்துள்ளது. உக்ரைன் பதிலடியில் ஆயிரக்கணக்கான ரஷ்யா வீரர்கள் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய விமானங்களை உக்ரைன் எளிமையாக வீழ்த்துகிறது. வசமாக சிக்கிவிட்டதை உணர்ந்துதான், பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்யா அழைப்பு விடுத்தது. ஆனால், ரஷ்யாவின் நேச நாடான பெலாரஸில் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது உக்ரைன் நிராகரித்துவிட்டது.

U.S. President Joe Biden

உக்ரைனில் ரஷ்யா சந்திக்கும் பின்னடைவுக்கு அமெரிக்காவின் ஜாவலின் ரக ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. முழு வீச்சில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால், சர்வதேச அளவில் ரஷ்யா மேலும் தனிமைபடுத்தப்படும். ஏற்கனவே ரஷ்ய பங்குச் சந்தை மூடப்பட்டுள்ளது, ரஷ்ய பணமான ரூபிளின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது. புதின் வரலாற்றில் இது மிகப்பெரிய அவமானமாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பெற்ற அடியையே உக்ரைனிலும் ரஷ்யா பெறும் என தெரிகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry