இந்தியாவில் கொரோனா 4வது அலை! எப்போது தொடங்கி, எப்போது முடியும்?

0
238

கொரோனா உருமாறலின் நான்காது அலை ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கக் கூடும் என்று கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் கணித்துள்ளனர்.

கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளை முன்கூட்டியே கணித்து வரும் கான்பூர் கணிதத் துறை பேராசிரியர்கள், 4வது அலை குறித்த தங்களது கணிப்பினை வெளியிட்டுள்ளனர். சபரா பர்ஷத் ராஜேஷ்பாய், சுப்ரா சங்கர் தர் மற்றும் ஷலப் ஆகியோர் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கினர். மூன்றாவது அலை குறித்த இவர்களின் கணிப்பு அப்படியே ஈடேறியதால், இம்முறை இவர்களது கணிப்பு கவனம் பெறுகிறது.

கான்பூர் கணித பேராசிரியர்களின் கணிப்பின்படி, ‘ஜூன் 22-ந் தேதி வாக்கில் கொரோனா 4வது அலை தொடங்கலாம். அடுத்த 2 மாதங்களில் இந்த அலை உச்சம் பெறும். அதாவது ஆகஸ்ட் 15 -30ந் தேதி இடையே 4வது அலையின் வீச்சு அதிகமாக இருக்கும். பின்னர் படிப்படியாக குறைந்து அக்டோபர் இறுதியில் முடிவுக்கு வரும். இந்த வகையில் சுமார் 4 மாத காலங்களுக்கு 4வது அலையின் வீச்சு இந்தியாவில் இருக்கும்’.

coronavirus testing

இந்த கணிப்பானது, கணிதவியல் கோட்பாடுகள் மற்றும் புள்ளிவிவர தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. கொரோனா புதிய திரிபுகளின் தோற்றம், வீரியம், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளின் செயல்பாடு போன்றவற்றை பொறுத்தே 4வது அலையின் பாதிப்பை உணர முடியும் என்றும் கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கொரோனா 2வது அலையுடன் ஒப்பிடுகையில் 3வது அலையில் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி, அதிலிருந்து விடுபட்டு வருகிறோம். மூன்றாவது அலை முடிந்தாலும் கரோனா முடிவதாக இல்லை. ஐரோப்பிய நாடுகளில் 4, 5 என்று அலைகள் அடுத்தடுத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry