தவறாக பயன்படுத்தப்படும் பி.சி.ஆர். சட்டம்! இங்க மதத்தை விட சாதிக்குதான் வேர்! அதிரடி கிளப்பும் ருத்ர தாண்டவம் டிரெய்லர்!

0
72

மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகி உள்ளருத்ர தாண்டவம்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரிஷி ரிச்சர்டின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன், கவுதம் மேனன் வில்லனாக மிரட்டுகிறார்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து தான் இயக்கிய திரெளபதி படத்தில் நாடக காதல் குறித்து மோகன்.ஜி பேசியிருந்தார். எதிர்ப்பும், ஆதரவுமாக கருத்துகள் வந்தாலும், வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றி பெற்றது. தியேட்டரில் வெளியாகி 18 நாட்களே ஓடிய நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டதால், பின்னர் அமேசான் பிரைம் மற்றும் விஜய் டிவியில் அந்த படம் ஒளிபரப்பானது.

3-வதாகருத்ர தாண்டவம்படத்தை மோகன் தயாரித்து இயக்கியுள்ளார். 7ஜி ஃபிலிம்ஸ் சிவா இதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார். டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பில், “ஒரு முள்ளை அகற்ற இன்னொரு முள் தேவைபடுகிறதுஎன மோகன் குறிப்பிட்டிருந்தது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

சுமார் 2 நிமிடங்கள் மற்றும் 50 நொடிகள் ஓடுகின்றடிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளனகதாநாயகனாக ரிஷி ரிச்சர்ட்டும், கதையின் நாயகியாக குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, தம்பி ராமையா, கவுதம் வாசுதேவ் மேனன்,  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போதைப் பொருள் பழக்கத்தால் இளம் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் காவல்துறை அதிகாரியாக ரிச்சர்ட் நடித்துள்ளார்.

சாதி, மதம் என ஏகப்பட்ட வசனங்கள் மூலமாக, தான் சொல்ல வருவதை ராதராவி, கெளதம் மேனன், தர்ஷா குப்தா மற்றும் தம்பி ராமைய்யா வசனங்கள் மூலம் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் மோகன். பிசிஆர் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக கதைக்களம் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மதமாற்றம் குறித்தும், இந்து மதத்தை இழிவு செய்கிறார்கள் என்பது போன்ற வசனங்களும் டிரெய்லரில் உள்ளன.  இது ரொம்ப பெரிய கேஸ்னு ராதாரவி சொல்வதை வைத்து பார்த்தால், படம் தொடர்பான விவாதங்களுக்கு பஞ்சமே இருக்காது என தெரிகிறது.

டிரெய்லரில், “என்னப்போய் சாதி வெறியன்னு ஊரெல்லாம் பேச வச்சுஎன ரிச்சர்ட் மூலம் வசனம் பேச வைத்து, மோகன் பலருக்கும் பதில் கொடுத்திருக்கிறார். இந்த ஆண்டே தியேட்டரில் ருத்ர தாண்டவம் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. ருத்ர தாண்டவம் டிரெய்லர் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry