ரோகித் செய்த பெரும் தவறு..! நம்பர் 1 பவுலரான அஸ்வினை சேர்க்காதது ஏன்? சச்சின் டெண்டுல்கர் கடும் காட்டம்!

0
73
GETTY IMAGE

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சச்சின், ரவி சாஸ்திரி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதனைச் செய்யவில்லை.

Also Read : பள்ளி திறந்தாச்சு! புத்தகம் கொடுத்தாச்சு! ஆசிரியர்கள் இல்லையே..! தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சனம்!

இருப்பினும் சில நல்ல தருணங்கள் இந்திய அணிக்கு கிடைத்தன. ஆனால், பிளேயிங் 11-ல் டெஸ்ட் போட்டியில் முதன்மை பந்துவீச்சாளாராக இருக்கும் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. போட்டிக்கு முன்னரே நான் கூறியதுபோல், திறனுள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் மைதானத்தின் தன்மைக்கேற்ப தங்களது பந்துவீச்சை சிறப்பாக செய்வார்கள். நீங்கள் மறக்கக் கூடாது. ஆஸ்திரேலியாவின் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடது கை ஆட்டக்காரர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு, கேப்டன் ரோகித் சர்மாவின் அணித் தேர்வும், இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங்கும், முதல் நாளில் இந்திய பவுலர்களின் மோசமான பந்துவீச்சுமே காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இந்திய அணி தரப்பில் அஸ்வின் சேர்க்கப்படவே இல்லை.

அதேபோல் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் ஆஸ்திரேலிய அணியினர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாரான போது, இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு நேரடியாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றதும் இந்திய அணியின் தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்துள்ளது.

2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை எம்எஸ் தோனி தலைமையில் வென்ற இந்தியா, அதன் பின் 2021 டி20 உலக கோப்பை தவிர்த்து அனைத்து ஐசிசி தொடர்களிலும் நாக் அவுட் போட்டியில் வெறும் கையுடன் வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry