இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இது வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்கு (Basic savings book deposit) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இதன்படி ஏடிஎம், வங்கிப் பரிவர்த்தனை, காசோலை மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்கு திறப்பவர்களின் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் எதுவும் இருக்கத் தேவையில்லை. அதேபோல, டெபாசிட் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.
வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அது வங்கிக் கணக்கு உள்ள கிளையின் ஏடிஎம் அல்லது இதர வங்கிக் கிளை ஏடிஎம் என எதுவாக இருந்தாலும் பொருந்தும். நான்கு முறைக்கு மேல் எடுத்தால், பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். வங்கியில் நேரடியாக பணம் எடுப்பதும் இந்த 4 முறைக்குள் அடங்கும்.
ஒரு நிதியாண்டுக்கு 10 செக் லீஃப்கள் இலவசமாக வழங்கப்படும். அதைத் தாண்டி 10 செக் லீஃப்களுக்கு ரூ.40 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். 25 செக் லீஃப்களுக்கு ரூ.75, எமெர்ஜன்சி செக் புத்தகத்துக்கு ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும். வங்கிக் கிளைகளில் பணம் எடுப்பதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. வங்கிக் கிளையில் காசோலை மூலமாகப் பணம் எடுத்தால் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். ஃபார்ம் மூலமாக எடுத்தால் ஒரு நாளில் ரூ.25,000 வரை எடுக்கலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry