50 வகை புற்றுநோயை கண்டறிய ஒரே ரத்தப்பரிசோதனை! அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே கண்டுபிடிக்கலாம்!

0
73

ஒரே ஒரு ரத்தப் பரிசோதனை மூலம், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே 50 வகையான புற்றுநோயைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தப் பரிசோதனைக்குகேலரி‘ (Galleri) என்று பெயர். (https://www.galleri.com/)

இதன் மூலம் எந்தவொரு மருத்துவ அறிகுறிகளையும் காண்பிப்பதற்கு முன்பே, போதுமான அளவிற்கு துல்லியமாக கண்டறியமுடியும் என்றும், இதனை பல புற்றுநோய்களை கண்டறியும் பரிசோதனையாகப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இது மார்பக, கர்ப்பப்பை வாய், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய்களுக்கான பிற தற்போதைய ஸ்கிரீனிங் நடைமுறைகளுக்கு துணைபுரிகிறது. மொத்தம் 1,34,000-க்கும் மேற்பட்ட நபர்கள் GRAIL-ன் ரத்த பரிசோதனைகளில் பங்கேற்றுள்ளனர்.

நோய் சமிக்ஞை கண்டறியப்பட்டால், உடலில் புற்றுநோய் எங்குள்ளது என்பதை அதிக துல்லியத்துடன் இந்த சோதனை சுட்டிக்காட்டுகிறது என்று, இந்த ஆராய்ச்சியை செய்த அமெரிக்காவின் கிரெயில் நிறுவன தலைமை மருத்துவ அதிகாரியும், வெளி விவகாரங்களின் தலைவருமான டாக்டர் ஜோசுவா ஆஃப்மேன் (Joshua Ofman) தெரிவித்தார். மிகவும் ஆபத்தான பல புற்று நோய்களை ஆரம்பகாலத்தில் கண்டறிவதால், இந்தகேலரிஇரத்த பரிசோதனையின் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry