என்.ஐ.ஏ.வின் 2வது கட்ட மெகா சோதனை! 8 மாநிலங்களில் பி.எப்.ஐ. நிர்வாகிகள் பலரும் கைது!

0
60

பி.எப்.. எனப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி செயலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து, தேசிய புலனாய்வு முகமையும்(என்...), அமலாக்கத்துறையும் இணைந்து அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகிகளை கண்காணித்து வந்தனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை அமலாக்கத்துறை உறுதிப்படுத்திய நிலையில், கடந்த 22-ந்தேதி நாடுமுழுவதும் 15 மாநிலங்களில் என்... அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் இணைந்து 93 இடங்களில் சோதனை நடத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் உள்பட 109 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் டெல்லியில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது.

Also Read : ஆம்பூரில் பற்றி எரிந்த காலணி தொழிற்சாலை! .டி. ரெய்டு நடந்த நிலையில் நேரிட்ட விபத்தால் சர்ச்சை!

எந்தெந்த இடங்களில் எல்லாம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ரகசியமாக இயங்கி வருகிறது என்பது உள்பட பல தகவல்கள் என்... அதிகாரிகளுக்கு விசாரணையில் கிடைத்துள்ளது. அந்த இடங்களில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி 8 மாநிலங்களில், என்... மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்  ஒருங்கிணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். நள்ளிரவு முதலே பல இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கியுள்ளனர். அதிகாலையில்தான் 2-ம் கட்ட சோதனை நடப்பதே தெரியவந்தது.

2-ம் கட்ட மெகா சோதனையில் கர்நாடகாவில் 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அசாம் மாநிலத்தில் 7 பேர் சிக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

Also Read : சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் தீவிரம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 6 பேரை என்... அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் சரத்பூர், மீரட், சியானா பகுதிகளில் என்... அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் சகின்பாத் மற்றும் ஜமியா பகுதிகளில் என்... அதிகாரிகளும், அதிரடி படை வீரர்களும் ஒருங்கிணைந்து சோதனை மேற்கொண்டு உள்ளனர். டெல்லியில் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Also Read : உச்சத்தில் வெடிகுண்டு கலாச்சாரம்! திறனற்ற முதல்வரை பெற்றுள்ளது வேதனைக்குரியது! ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

அசாம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி உள்பட 8 மாநிலங்களில் நடந்து வரும் சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக டெல்லியில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 8 மாநிலங்களில் இருந்து மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்களும் அடங்கும்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணபரிமாற்றம் மூலம் சுமார் ரூ. 120 கோடி வந்திருப்பதை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதுபோல பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் எத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்ற தகவல்களை என்... அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry