சிறுபான்மையினருக்கு எதிரான ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்டு தேவையில்லாத பதற்றத்தை தமிழக அரசு உருவாக்குகிறது. அதனால் திரைப்படம் வெளியாகும் திரை அரங்குகளை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அயோத்திதாசரின் 109-வது நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் எந்த பெருமையும் இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் வரலாற்று போராளிகளின் பெயர்களை மறைத்து இந்த திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து தமிழர்களின் பெருமையும் தனிச்சிறப்பும் திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்டு வருகிறது. சமாதி கட்டுவது, பேனா வைக்க நிதியை ஒதுக்கிவிட்டு, பள்ளிக்கூடங்களை சீரமைக்க மக்களிடம் கையேந்துவது இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் ஒரு தீஞ்சிபோன மாடல் தான், ஆளுநர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.
SEEMAN PRESS MEET
தமிழகத்தில் வெளியாகி உள்ள ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறோம். எதற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சிறுபான்மை மக்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அவர்களுக்கு எதிராக வெளியான படத்தை தமிழகத்தில் வெளியிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். திரையரங்குகள் முன்னால் போராடினால் தமிழக அரசால் என்ன செய்ய முடியும்.
தொழிலாளர் நலச் சட்டத்தை அவசர அவசரமாக திமுக கொண்டு வந்ததன் காரணம் என்ன? பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் கூட கொண்டு வரவில்லை. அவசர அவசரமாக சட்டத்தைக் கொண்டு வந்து பின்னர் திரும்ப பெற்றது ஏன்? அதனால் பாஜகவின் வருடிகளாக திமுக உள்ளது என்பதே உண்மை’’ என்றார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry