கலக்கத்தில் விழுப்புரம் மாவட்ட பாஜக பெண் பிரமுகர்கள்! சல்லாபக்  களியாட்டம் போடும் ‘கலிவரதன்’! நடவடிக்கை எடுக்குமா கட்சித் தலைமை?

0
157

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் VAT கலிவரதன் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். பாமக முன்னாள் எம்.எல்..வான இவர், பாமக மற்றும் திமுகவில் இருந்தபோதும், பாலியல் புகாரில் சிக்கி கட்டம் கட்டப்பட்டதாலேயே, பாஜகவுக்கு தாவியதாக கூறப்படுகிறது.

ராணுவத்துக்கும் மேலான கட்டுப்பாடும், அதீத ஒழுக்கமும் நிறைந்த இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். இந்த இயக்கத்தில் இருந்துதான் கட்சிக்கு நிர்வாகிகள் அனுப்பப்படுவது வழக்கம். அவர்கள் தலைமையில், கட்சி மிக ஒழுக்கமாக வழிநடத்தப்படும். ஆனால், மாறிவரும் அரசியல் சூழலால், மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணைகின்றனர், இணைக்கப்படுகின்றனர். இது தவிர்க்க இயலாத ஒன்று.

ஒழுக்கத்துக்குப் பெயர்பெற்ற பாஜகவில், மாவட்ட தலைவர் மீதே பாலியல் புகார் எழுந்திருப்பது, கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் விஏடி கலிவரதன், திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூர் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். கட்சியினரை அரவணைக்காமல், மரியாதைக் குறைவாக நடத்துவதாக இவர் மீது புகார் உண்டு. இவரது நடவடிக்கையால் கட்சியிலிருந்து பலர் வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த மாவட்ட பாஜக மகளிரணி நிர்வாகி காயத்திரி, கட்சியின் மாநில தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறார். அதில், மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கித் தருவதாக கூறி, கலிவரதன், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ரூ.5 லட்சம் வாங்கிக் கொண்டதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம், சொந்த கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், மாற்றுக் கட்சியினரிடையே ஏளனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுஒருபுறமிருக்க, தங்களை ஏமாற்றிவிட்டதாக இரண்டு பெண்கள் கலிவரதனுக்கு சாபம் விடும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ஒரு ஆடியோவில் பெண் ஒருவர் மட்டும் பேசுகிறார்.(இது கலிவரதன் சம்பந்தப்பட்டதுதானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை, அதனால் அதை வெளியிடவில்லை). மற்றொரு ஆடியோவில், கலிவரதனும் மற்றொரு பெண்ணும் பேசுகிறார்கள்.


இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விஏடி கலிவரதன், விழுப்புரம் மாவட்ட பாஜகவின் வளர்ச்சியை தடுப்பதற்கு திட்டமிட்டு, வதந்தியை பரப்பி, ஆதாயம் பெறுவதற்காக தன்மீது குற்றம் சுமத்துவதாகக் கூறியுள்ளார். யதார்த்தமாக பழகுவதும், பேசுவதும் தனது வாடிக்கை என்றும்,  உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசியதை தவறாக பயன்படுத்தி, தன் மீது களங்கம் சுமத்தி இருப்பதாகவும் முகநூலில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

https://www.facebook.com/vatkalivarathan.exmla/posts/1099411257167198

விஏடி கலிவரதன் பற்றி விழுப்புரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார்கள். “பாமக சார்பில் முகையூர் தொகுதி எம்.எல்..வாக கலிவரதன் இருந்துள்ளார். அந்தக் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவரிடம் சில்மிஷம் செய்து, அது தைலாபுரம் தோட்டம் வரை செல்ல, பாமகவில் இருந்து ஒதுக்கப்பட்டார். பின்னர் திமுகவுக்கு சென்றவர், அங்கேயும் ஏடாகூட செயல்களில் ஈடுபட, அங்கிருந்தும் ஒரங்கப்பட்டார்.

இதன்பிறகே, பாஜகவுக்கு வந்து மாவட்ட தலைவராக பதவி பெற்றுள்ளார். எந்தக் கட்சிக்குச் சென்றாலும், பெண் நிர்வாகிகளுக்கு குறிவைப்பதிலேயே அவர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இவர் பாமகவில் இருந்தபோது, பாஜகவையும், பிரதமர் மோடியையும், பொன். ராதாகிருஷ்ணனையும் மிகக் கடுமையாக விமர்சித்தவர்என்று கூறுகின்றனர். இதையறிய, அவரது பழைய முகநூல் பதிவுகளை தேடியபோது, அந்தப் பதிவுகளை, அவர் நீக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பாஜக பிரமுகரான சங்கரநாராயணன் என்பவர், இவரைப்பற்றி பதிவிட்டிருந்ததை இங்கே இணைத்துள்ளோம்.

Source: https://www.facebook.com/permalink.php?id=108647933979217&story_fbid=175750070602336

மகளிரணி நிர்வாகி புகார் அனுப்பியும், அந்தப் புகார் வலைதளங்கில் வைரலாகியும், பாஜக தலைமை மவுனமாக இருப்பது ஏன் என விழுப்புரம் மாவட்ட பாஜகவினர் கேட்கின்றனர்.  கட்சியில் உள்ள செல்வாக்கைப் பயனபடுத்தி, கலிவரதன் தம் மீதான புகாரை நீர்த்துப்போகச் செய்துவிடுவார் என்பதால், மாவட்ட மகளிர் அணி பிரமுகர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம், மற்ற கட்சியைப் போன்றுதானா பாஜக? என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, பெண்கள் பாஜகவுக்கு வருவதை தடுக்கக்கூடும். இதனால் கட்சியின் இமேஜ் பாதிக்கப்படும். இதைத் தடுத்த மாநில பாஜக தலைமை உரிய விசாரணை நடத்தி, கலிவரதனோ, காயத்ரியோ, யார் தவறு செய்திருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.