வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்! வாக்காளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய அதிமுக-வினர்!

0
76

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த நவ. 9-ம் தேதி தொடங்கிய இப்பணிகள் வரும் டிச.8-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதற்கிடையே, வார வேலை நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தப்பணிகளை மேற்கொள்ள இயலாதவர்களுக்காக, நவ.12, 13 மற்றும் நவ.26, 27 ஆகிய இரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Also Read : தமிழக நிலங்களை அபகரிக்க கேரளா முயற்சி! மவுனமாய் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு!

அந்த வகையில் முதல் கட்ட முகாம் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட முகாம் நேற்று தொடங்கியது. நேற்று காலை முதலே தமிழகத்தில் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அளித்தனர். தொடர்ந்து, இன்றும் இந்த முகாம் நடைபெற்றது.

Also Read : பன்னாட்டு நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி! தர மறுத்ததால் சாலையை சேதப்படுத்தி அட்டகாசம்!

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகாம்களை நடத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி தென்சென்னை தெற்கு(கி) மாவட்ட செயலாளர் வேளச்சேரி எம்.கே. அசோக் Ex. M.L.A. மேற்பார்வையில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை அதிமுக நிர்வாகிகள் நடத்தினார்கள்.

மயிலாப்பூரில் வடக்கு பகுதி கழக 124வது வட்ட அஇஅதிமுக சார்பில் பி.எஸ். மேல்நிலைப் பள்ளி அருகே, பகுதி செயலாளர் பி. கணேஷ்பாபு, வட்ட செயலாளர் ஆர். சுரேஷ், கே. ஆர். காசிநாதன், முன்னிலையில் வாக்களர் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்  பி.எஸ். ராஜாராம் முகாமை பார்வையிட்டார். ஊடகவியலாளர் ‘அம்மா’ கோபி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்

திங்கள் கிழமை(நாளை) முதல் டிசம்பர் 8 வரை தாலுகா அலுவலகங்களிலும், இணையதளம் மற்றும் செயலி வாயிலாகவும் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம். மேலும், தற்போது 17 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்க முடியும். 18 வயது ஆனதும், பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry